ரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி வெற்றி

  • June 6, 2019
  • 154
  • Aroos Samsudeen
ரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கெட் திருவிழாவில் 7-வது நாளான இன்று சவுத்தாம்டனில் நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பந்து வீசியது.

50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்கள் ஆன தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர், தவான் மற்றும் விராட் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார்.

இவர் 128 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் சதத்தை பூர்த்தி செய்தார். வெற்றியை நோக்கி ஆடிய இந்திய அணி இறுதியில் 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை எடுத்து. தென் ஆப்பிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ரோகித் 122 ஓட்டங்களுடனும், பாண்டியா 15 ஓட்டங்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் ரபாடா 2 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் மற்றும் பெலக்வாயோ தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக ரோசித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

Tags :
comments