ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுசன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆய்வு !

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி தலைமையில் சிறிலங்கா சுதந்திர கட்சியினர் இது குறித்து கடந்த தினங்களில் கலந்துரையாடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தை நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர் கலைப்பதென்றால், மூன்றிலிரண்டு அறுதிப்பெரும்பான்மை தேவை.

எனவே மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தி, நாடாளுமன்றத்தை கலைப்பதா? இல்லையா? என்பதை முடிவு செய்வது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.