அக்கரைப்பற்றில் 480 சமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

  • June 14, 2019
  • 231
  • Aroos Samsudeen
அக்கரைப்பற்றில் 480 சமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வு

புதிதாக ஆறு இலட்சம் குடும்பங்களை சமுர்த்தி பயனாளிகளாக இணைத்துக் கொள்ளும்  தேசிய திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 480 சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் கௌரவ தயா கமகே கலந்து சிறப்பித்து சமுர்த்தி பயனாளிகளுக்கு உரித்துப்பத்திரம் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ பைசல் காசிம் மற்றும் A.L.M.நசீர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளர் U.K. ஆதம் லெப்பை சமூர்த்தி முகாமையாளர்கள், சமூரத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், நகர சபை பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் சமூரத்தி பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Tags :
comments