பதவிக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுத்த முஸம்மில்

  • June 15, 2019
  • 290
  • Aroos Samsudeen
பதவிக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுத்த முஸம்மில்
நான்  குழுக்களில் சேர்வதில்லை. முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து இராஜினாமா செய்துள்ளமை தொடர்பாக அவர்களிடமே கருத்துக் கேட்க வேண்டும். நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவைச் சேர்ந்தவனாவேன் என, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி எனக்கு ஆளுநர் பதவியை தந்தார். நான் பதவியை பொறுப்பேற்றேன். இதில் விசேடம் எதுவும் இல்லை. நான் நாட்டுக்கு சேவையாற்றவே வந்துள்ளேன். நான்    குழுக்களில் சேர்வதில்லை என்றார்.
Tags :
comments