பிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க

  • July 16, 2019
  • 384
  • Aroos Samsudeen
பிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க

பௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அனுப்பியுள்ள சூழ்நிலையில் – சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில் பிக்கு ஒருவர் புகைபிடிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார் ரஞ்சன் ராமநாயக்க.

ஆனால் பத்து நிமிட இடைவெளிக்குள் அது முகநூலில் இருந்து அகற்றப்பட்டது.

இரகசியமான முறையில்  அந்த விடியோ பிக்குகள் தங்கியுள்ள ஒரு இடத்தில்  எடுக்கப்பட்டிருந்தது

ஏற்கனவே பிக்குகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள ரஞ்சனின் இந்த விடியோ மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தலாமென கருதப்படுகிறது.

Tags :
comments