குருணாகல் நீதிவானுடைய இனவாதம் – CID நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு

  • July 21, 2019
  • 907
  • Aroos Samsudeen

( எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிசேஷ்ட வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான விவகாரத்தில் குருணாகல் நீதிவானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றினை நடத்துமாறு சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சுயாதீன நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் முறைப்பாடளித்துள்ளது.

குறித்த வழக்குடன் தொடர்பில்லாத குருணாகல் போதன வைத்தியசாலையின் பனிப்பாளர், பல் வைத்தியர் சரத் வீர பண்டாரவுக்கு பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பில் மன்றில் கருத்துக்கூற இடமளித்தமை, அவ்வாறு அவர் கூறிய கருத்துக்களை வழக்குப் பதிவுகளில் இருந்து நீக்க உத்தரவிட்டமை ஆகியவற்றை மையபப்டுத்தி சி.ஐ.டி. இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

அத்துடன் இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகளுக்கு தேவையான மிக அவசியமான சில உத்தரவுகளை வழங்காது, குருணாகல் நீதிவான் பக்கச் சார்பாக நடந்துகொள்வதாக தோன்றுவதாகவும் சி.ஐ.டி. தனது முறைப்படடில் சுட்டிக்கடடியுள்ளது.

இதேவேளை சி.ஐ.டி.யை தூற்றும் வகையில் குறித்த நீதிவனின் முகப்புத்தகத்தில் பதிவொன்று இடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலும் ஆரயந்து பொருத்தமான நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்குமாறும் சி.ஐ.டி. சுயாதீன நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் முன்வைத்துள்ள முறைப்பாட்டில் சுட்டிக்கடடியுள்ளது.

Tags :
comments