எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த வேட்பாளராக நானே!

  • July 30, 2019
  • 223
  • Aroos Samsudeen
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த வேட்பாளராக நானே!

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கல்முனை தொகுதியில் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த வேட்பாளராக நானே களமிறங்கவுள்ளேன், இது கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீத், சாய்ந்தமருது அமைப்பாளர் முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பிர்தௌஸ், அப்துல் பஷீர், நிஸார்தீன் உட்பட கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களான பாமி முபாரக் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடன் போட்டியிடவுள்ளேன் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ.சி யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;

இன்று எதிர்வரும் மாகாண சபை தேர்தல் பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். எது எப்படி இருந்தாலும் நானே வேட்பாளர். சிலர் இன்று கட்சிக்குள் மீண்டும் வருவதற்கு துடிக்கிறார்கள். அப்படி யாரும் கட்சிக்குள் வரலாம். கதவு திறந்தே உள்ளது.

ஆனால் அவர்கள் பூச்சியத்தில் இருந்தே தொடங்க வேண்டும். கட்சியின் தலைவர் ஹக்கீமின் வாக்குறுதிகள் இல்லாமல் வேறுநபர்கள் வழங்கும் போலியான வாக்குறுதிகளை நம்பி வந்தால் அது அவர்களின் மடமை.

எதிர்வரும் தேர்தலில் சாய்ந்தமருது சார்பான வேட்பாளர் நானே. இதில் மாற்று கருத்து இல்லை. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓர் கொலைக்களமாக இருந்தது அதற்கு தாக்குப்பிடித்தவர்கள் நாமே. உயிரை பணயம் வைத்து கட்சிக்காக பாடுபட்டுள்ளோம்.

மு.கா வுடனான எனது கட்சி பயணம் கடந்த 9 வருட காலமாக கரடுமுரடான பாதைகளாக இருந்தது. . தாக்குப்பிடித்தவர்கள் நாமே. உயிரை பணயம் வைத்து கட்சிக்காக பாடுபட்டுள்ளோம்.

இவை அனைத்தையும் நன்கு அறிந்தவராக கட்சியின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் இருக்கிறார். அவர் ஒருபோதும் எனக்கு துரோகம் செய்யமாட்டார் என நம்புகிறேன்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்தே
அம்பாரை மாவட்டம் முழுவதும் எனது கட்சி பணிகளை முன்னெடுத்துள்ளேன். விரைவில் அலுவலகம் ஒன்றை மாவட்ட செயலகமாக திறக்கவுள்ளேன். எதிர்காலத்தில் கட்சி பணிகளை மாவட்டம் முழுவதும் விஸ்தரிக்க எண்ணியுள்ளேன்.

Tags :
comments