அக்கரைப்பற்று பேருந்து சாலை சாரதி மீது மாணவர்கள் குற்றச்சாட்டு ( வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

அக்கரைப்பற்றிலிருந்து வவுனியா நோக்கி தினமும் காலை 7.00 மணிக்குப் புறப்படும் பேருந்து அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்னாள் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் சாரதி பேருந்தை நிறுத்தாமல் செல்லுவதால் பிரத்தியக வகுப்புகளுக்காக கல்முனைக்கு செல்லும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பிட்ட இந்த பேருந்தில் பயணம் செய்வதன் மூலமே காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் வகுப்புகளுக்கு மாணவர்களால் சமூகமளிக்க முடியும்

மாணவர்கள் பேருந்து நிறுத்துமிடத்தில் பேருந்தை நிறுத்துவதற்கான சமிஞ்சையை வெளிப்படுத்தியபோதும் சாரதி பேருந்தை நிறுத்தாமல் மிக வேகமாக பேருந்தை செலுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபை இலகு கட்டணத்தில் போக்குவரத்து கூப்பன்களை வழங்கிவருகின்ற நிலையில் இவ்வாறான சாரதிகளின் மிக மோசமான செயற்பாடுகள் அக்கரைப்பற்று பேருந்து சாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அக்கரைப்பற்று பேருந்து சாலைக்கு மாணவர்களினால் முறையிடப்பட்டபோதும் இந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கல்முனை பேருந்து சாலை உயர் அதிகாரிக்கு மாணவர்களினால் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

https://www.facebook.com/samsudeen.aroos.9/videos/pcb.109222443762704/109222367096045/?type=3&theater