செய்திகள்
அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்
 • June 25, 2019
 • 189
அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

ஊடகப்பிரிவு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றுநிருபத்தை,  மீண்டும்திருத்தி வௌியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும்சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்அவர்கள் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கவனத்திற்குகொண்டு வந்துள்ளளார். இச்சிக்கலைத் தீர்த்து வைக்க முகத்தை திறந்து முஸ்லிம்களின் கலாசார உடையில்  அபாயா அணிவதையும் அனுமதித்து புதிய சுற்றுநிருபத்தை விரைவில் வௌியிடுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்பதியுதீன்  கடிதமொன்றை  தனித்தனியாக இவர்களுக்குஅனுப்பிவைத்துள்ளார். அக்கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அண்மையில் வௌியிடப்பட்ட அரச ஊழியர்களின்  ஆடை தொடர்பிலான சுற்று நிருபத்தில்முஸ்லிம் பெண்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அலுவலகங்களுக்குச் செல்வதில்முஸ்லிம் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். தேசிய உடை என்ற போர்வையில் பாரம்பரிய முஸ்லிம்களின் கலாசாரஆடைகள் மீது கட்டுப்பாடு விதிப்பதும், இஸ்லாமிய கலாசார விடயங்களில் தேவையற்ற நெருக்குதல்களை ஏற்படுத்துவதும்சமூகங்களுக்கிடையில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்துவதாகவுள்ளது. இனங்களை மோதவிட்டு சுய இலாபங்களையும் அரசியல் முதலீடுகளயைும் அதிகரிக்கக் காத்திருக்கும் இனவாதிகளும் அண்மையில்வௌியிடப்பட்ட சுற்று நிருபத்தை ஒரு இனத்தின் மீதான ஒடுக்கு முறையாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இவ்விபரீதங்களைக் கருத்தில் கொண்டு கலாசாரங்களின் நம்பிக்கைகளில் தேவையில்லாத தலையீடுகளைத் தவிர்க்கும் வகையில் புதியசுற்று நிருபத்தை அவசரமாக வௌியிட வேண்டும். மேலும், பாரம்பரியமாக இலங்கை முஸ்லிம் பெண்கள் அணிந்து வந்த அபாயாவையும் அனுமதித்து புதிய சுற்று நிருபத்தைவௌியிடுவது சிறப்பாக அமையும். மேலும் ஏற்கனவே வௌியிடப்பட்ட சுற்று நிருபத்தால் சில அரச அதிகாரிகளினால் ,அலுவலகங்களிலும், பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் தேவையற்ற நெருக்கடிகளை எதிர் கொள்ளநேர்ந்தது. இதைத் தவிர்க்கும் பொருட்டு ஆடைகள் தொடர்பில் தௌிவான வரையறைகளை உள்ளடக்கி புதிய சுற்று நிருபத்தைவௌியிட வேண்டும் என்றும் பாரளுமன்ற உறுப்பினரும் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான  ரிஷாத் பதியுதீன் தனதுகடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Read Full Article
கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்
 • 196
கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்

சுஐப் எம். காசிம் துருவப்படும் வடக்கு, கிழக்கு சமூகங்களின் உறவுகள், சிறுபான்மையினரின் எல்லைகளை […]

Read Full Article
தோப்பூர் உப பிரதேச, செயலகத்தையும் தரமுயர்த்து – வலுவடையும் முஸ்லிம்க‌ளின் கோரிக்கை
 • 272
தோப்பூர் உப பிரதேச, செயலகத்தையும் தரமுயர்த்து – வலுவடையும் முஸ்லிம்க‌ளின் கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்தின், தோப்பூர் உப பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டுமென கிழக்கு மாகாண […]

Read Full Article
“அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு எந்தவொரு அவசரம் இல்லை” – ரிசாத்
 • June 24, 2019
 • 121
“அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு எந்தவொரு அவசரம் இல்லை” – ரிசாத்

தனக்கு எதிரான விசாரணைகள் நிறைவடையும் வரை மீண்டும் அமைச்சு பதவிகளை ஏற்கப் போவதில்லை […]

Read Full Article
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா
 • 271
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க […]

Read Full Article
55 நாட்கள் சிறையிலிருந்த 3 அப்பாவி, முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை
 • 230
55 நாட்கள் சிறையிலிருந்த 3 அப்பாவி, முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை

27/04/2019 அன்று கண்டி திகனை மற்றும் பல்லேகலையைச்சேர்ந்த 3 அப்பாவி முஸ்லிம்களாகிய ரிகாஷ்,சிராஜ் […]

Read Full Article
இலங்கை சிறுபான்மையினருக்காக, அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்
 • 215
இலங்கை சிறுபான்மையினருக்காக, அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்

இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை […]

Read Full Article
தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதகார, முஸ்லிம்கள் பொறுப்பேற்க வேண்டும் – மனோ
 • 284
தேரர்கள் உள்ளே நுழைந்தமைக்கு பிடிவாதகார, முஸ்லிம்கள் பொறுப்பேற்க வேண்டும் – மனோ

நான் வரித்துக்கொண்ட அரசியல் நாகரீகம் ஒன்று இருக்கிறது.  எனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல், […]

Read Full Article
முஸ்லிம்கள் அதிகளவு வியாபாரம் செய்வதால், எங்களால் வியாபரம் செய்ய முடியாத நிலை
 • June 23, 2019
 • 204
முஸ்லிம்கள் அதிகளவு வியாபாரம் செய்வதால், எங்களால் வியாபரம் செய்ய முடியாத நிலை

தமிழ்,சிங்கள வியாபாரிகளை ஒன்றிணைத்து வர்த்தக சங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற […]

Read Full Article
முஸ்லிம்களுக்கு எதிரான மோடியின், திட்டத்தை கையிலெடுத்துள்ள மஹிந்த
 • 380
முஸ்லிம்களுக்கு எதிரான மோடியின், திட்டத்தை கையிலெடுத்துள்ள மஹிந்த

பல பெண்களை  திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்பது  முழுமையாக மாற்றியமைத்து அனைவரும் […]

Read Full Article
இலங்கையில் 2090 இல் முஸ்லிம்களே, பெரும்பான்மை இனம் – சம்பிக்க (வீடியோ)
 • 381
இலங்கையில் 2090 இல் முஸ்லிம்களே, பெரும்பான்மை இனம் – சம்பிக்க (வீடியோ)

2090ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனமாக இருப்பார்கள் என்ற சிங்களத் தலைவர் […]

Read Full Article
Dr ஷாபிக்கு அவதூறு கற்பித்த DIG யிடம் 8 மணித்தியாலம் விசாரணை, புத்தளத்திற்கும் இடமாற்றம்
 • 162
Dr ஷாபிக்கு அவதூறு கற்பித்த DIG யிடம் 8 மணித்தியாலம் விசாரணை, புத்தளத்திற்கும் இடமாற்றம்

டொக்டர் ஷாபி விவகாரத்தை திவயின பத்திரிகை மூலம் வெளிப்படுத்த காரணமாக இருந்த குருநாகல் […]

Read Full Article
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளருக்கு 3 யோசனைகளை முன்வைத்துள்ள மிலிந்த மொரகொட
 • 255
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளருக்கு 3 யோசனைகளை முன்வைத்துள்ள மிலிந்த மொரகொட

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளருக்கு மூன்று யோசனைகளை முன்னாள் அமைச்சர் மிலிந்த […]

Read Full Article
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை, அரசாங்கம் எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடமில்லை
 • 280
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை, அரசாங்கம் எடுத்துக்கொள்ள சட்டத்தில் இடமில்லை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு சட்டத்தில் இடமில்லை என முன்னாள் […]

Read Full Article
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பைசல் காசீம் எம்.பி கலந்து கொள்கின்றார்.
 • June 22, 2019
 • 391
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பைசல் காசீம் எம்.பி கலந்து கொள்கின்றார்.

கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் மூன்றாவது நாளாகவும்  இடம்பெற்றுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் […]

Read Full Article