முகத்தில் கருமை நீக்க ஆலோசனை

Image title

சூரியக்கதிர்கள் அதிகமாக சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகிறது. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க, இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில்

மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இருக்காது. சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
எலுமிச்சை மற்றும் தேன்: இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், இரண்டு ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.

மஞ்சள் தூள்: வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலி வை அதிகரிக்க, 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு: எலுமிச்சை ஒரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு முகத்தில் மென்மையாக பூசி, குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை அகலும்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

கற்றாழை ஜெல்: கற்றா ழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

28 விரல்களைக் கொண்ட மனிதர்

Image title

இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர் மாதம் கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டவர்.

43 வயதான தேவேந்திர சுதாரின் ஒவ்வொரு கைகளிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன.

அதேபோன்று ஒவ்வொரு கால்களிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன.

தனது கை, கால்களிலுள்ள மேலதிக விரல்களை இறைவன் தனக்கு அளித்த கொடை என அவர் கருதுகிறார்.

தச்சுத்தொழிலாளியாக தேவேந்திர சுதார் பணியாற்றுகிறார். இந் நிலையில், தான் பணியாற்றும் போது மேற்படி மேலதிக விரல்களை தற்செயலாக தான் வெட்டிவிடக்கூடும் என அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

28 விரல்களுடன் காணப்படும் தேவேந்திர சுதாரை பார்வையிடுவதற்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Image title

Image title

பாலமுனை (ஜஸ்கா) ஏற்பாட்டில் எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம்

Image title

பாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் ஹைரிய்யாவின் (ஜஸ்கா) ஏற்பாட்டில் பாலமுனையில் எதிர்வரும் 30 ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம் நடைபெற ஏற்பாடகியுள்ளது.

இவ் வைத்திய முகாமில்

01. 100 நோயாளிகளுக்கு கண்வில்லை மாற்று சத்திர சிகிச்சை

02. 150 நோயாளிகளுக்கு மருத்துவ கண்ணாடி வழங்குதல்

03. 350 நோயாளிகளுக்கு வாசிப்புக் கண்ணாடி வழங்குதல்

04. 200 சாதாரண நோயாளிகளுக்கு சாதாரண கண் சிகிச்சை வழங்குதல்.

05. 600 நோயாளிகளுக்கு பொது வைத்திய நிபுணர்களின் சிகிச்சை

06. 300 சிறுபிள்ளைகளுக்கு சிறு பிள்ளை வைத்திய நிபுணர்களின் சிகிச்சை

07. 200 நோயாளிகளுக்கு காது மூக்கு தொண்ைட வைத்திய நிபுணரின் சிகிச்சை

08. 100 நோயாளிகளுக்கு தோல் வைத்திய நிபுணரின் சிகிச்சை என்பன இவ்வைத்திய முகாமில் வழங்கப்ப்பவுள்ளன

அத்தோடு பிரபலமான வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மாத்திரமன்றி கண்ணாடிகளும் மருந்துகளும் கூட முழுமையாக இலவசமாக வழங்கிவைக்கப்படவுள்ளது.

இவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெற்று பயனடைய விரும்புபவர்கள் முற்கூட்டியே தங்களைப் பதிவுசெய்துகொள்ளவேண்டும்.

முற்பதிவுசெய்துகொள்பவர்களுக்கு மாத்திரமே குறித்த வைத்திய முகாமில் சிகிச்சை வழங்கபடும் என்பதோடு, பதிவுசெய்துகொள்ள விரும்பும் நோயாளிகள் முன்கூட்டியே 0770085105, 0754151077 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொபர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்துகொள்ள முடியும்.

சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கு நாளை விஜயம்

Image title

கிழக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

யுத்த நெருக்கடியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறை நலிவடைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை தொடர்பான குறைபாடுகளைக் களைவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். இந்த வகையில் வைத்தியர் பற்றாக்குறை, தாதியர் பிரச்சனை, வாட்டில் தங்கியிருக்கும் நோயாளிகள் எதிர் நோக்கும் கஷ்டங்கள், உபகரணப்பற்றாக்குறை, அன்பியுலன்ஸ் வசதிகளை மேற்கொள்ளல் போன்றவற்றை சீர் செய்வதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கௌரவ பிரதி அமைச்சர் பைசால் காசிம் கிழக்கில் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்கின்றார்.

நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் சாந்திவெளி, மாவடிவேம்பு, நெடியமடு, கறடியனாறு, செங்கலடி ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்கின்றார். பிரதி அமைச்சரின் இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாவட்ட அரசியல் பிரமுகர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்கின்றனர்.

(எம்.ஐ அஹமட் கபீர்)

சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்.

அம்பாறையில் சுகாதார அமைச்சும், வெளிநாட்டு வைத்தியா்களும் நடாத்தும் இலவச வைத்தியமுகாம்

Image title

(அஷ்ரப் ஏ சமத்)

அம்பாறை மாவட்டத்தில் 25 – 28 ஆம் திகதி சுகாதார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வைத்தியா்களின் இலவச வைத்திய முகாம்.

சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம்

வேண்டுகோளுக்கினங்க ” ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள் ” நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் ” மாபெரும் இலவச மருத்துவ முகாம்” எதிர்வரும் 25ம் திகதி முதல் 28ம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.

இதன் அடிப்படையில்

* ஜனவரி 25ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) நிந்தவூர் மதீனா

பாடசாலையிலும்,

* ஜனவரி 26ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) அட்டளைச்சேனை அரபா

வித்தியாலயத்திலும் ,

* ஜனவரி 27ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) சம்மாந்துறை

அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும் ,

* ஜனவரி 28ம் திகதி (காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை) மகாஓய சனசமுக

மண்டபத்திலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அட்டளைச்சேனையில் நடைபெறும் மருத்துவ முகாமுக்கு மாகான சுகாதார

அமைச்சர் நசீர் அவர்களது அதிகாரிகளும் கொள்ள உள்ளனா்.

சகல வைத்திய சேவைகளையும் கொண்ட மருத்துவ முகாமிற்கு வெளி நாட்டிலிருந்து ஜரோப்பிய கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் வைத்திய குழுவினர்கள் வருகை தரவுள்ளதுடன் இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர்களும் இவ்வைத்திய முகாம்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் மூக்கு கண்னாடி பரிசோதனை இரத்த அழுத்தம், உடம்பில் உள்ள சர்க்கரை வியாதி, என பல்வேறு பரிசோதனை இலவச வைத்திய பரிசோதனைகள் நடைபெறும் இதில் அந்தந்த பிரதேச நோயாளிகள் மேற்படி முகாம்களுக்கு கலந்து முழு பயன்களையும் பெற்று சுக பாக்கியத்துடன் வாழும் மாறு பிரதி சுகாதார அமைச்சா் பைசால் ஹாசீம் வேண்டியுள்ளாா்.