அதிபராக, முதல் முறையாக அமெரிக்க மசூதிக்குச் செல்லும் ஒபாமா..! விருந்திலும் பங்கேற்பு

Image title

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை ஒட்டியுள்ள மசூதிக்கு இன்று அந்த நாட்டு அதிபர் ஒபாமா செல்ல இருப்பதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது பல்வேறு மசூதிகளுக்குச் சென்றுள்ளார். ஆனால், அமெரிக்காவிலுள்ள மசூதிக்கு இதுவரை சென்றதில்லை.

விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் பதவி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட சில வேட்பாளர்கள் முஸ்லிம் விரோதக் கருத்துகளை வெளியிட்டு வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா மேரிலாந்தில் அருகே உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று வருகை தருகிறார். அங்கு முஸ்லிம்களுடன் அவர் உரையாடுகிறார்.

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், தலைநகரையொட்டி அமைந்துள்ள மசூதிக்கு அதிபர் ஒபாமா புதன்கிழமை செல்கிறார். அங்கு பிரார்த்தனைக்குப் பிறகு நடைபெறும் விருந்தில் அவர் கலந்து கொள்கிறார். அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கவும், அனைத்து மதத்தினருக்கும் தங்களது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அமெரிக்காவில் உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் அவர் மசூதி செல்கிறார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் அமெரிக்காவில், அண்மைக் காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளால் மதச் சுதந்திரம் கேள்விக் குறியாகியுள்ளது. அத்தகைய சந்தேகங்களைப் போக்கும் வகையில் அதிபர் ஒபாமா மசூதிக்குச் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், சீக்கிய அல்லது இந்துக் கோவிலுக்குச் செல்லும் திட்டம் ஒபாமாவிடம் இருக்கிறதா என்று தனக்குத தெரியவில்லை என்றும் எர்னஸ்ட் கூறினார். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியை அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்சேலும் கடந்த 2010-ம் ஆண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

விஜையின் துப்பாக்கி பாணியில் அதர்வாவின் கணிதன்

இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறப்படும் விஜைய் நடித்த திரைப்படம் துப்பாக்கி.

இத்திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமது பல நாடுகளில் வசூலை அள்ளியது.

இத்திரைப்படத்தின் பாணியில் அதர்வா நடிக்கும் கணிதன் திரைப்படம் அமைவதாக இந்திய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பல சுவையான தகவல்களுக்கு kalam1st.com உடன் இணையுங்கள்.

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் – கர்நாடக மாநிலத்தில் சம்பவம்

Image title

இந்­திய கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் திரு­ம­ணத்தில் ரசம் இல்­லா­ததால் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

கர்­நா­டக மாநிலம் தும்கூர் மாவட்­டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகு­தியைச் சேர்ந்த பிர­காசம் – சௌபாக்­கி­யம்மா தம்­பதிகளின் மகள் சௌமியா. இவ­ருக்கும் ஸ்ரீரா­ம­புரம் திம்­மை­யம்மா மகன் ராஜு­வுக்கு குனிக்கல் கிரா­மத்தில் நேற்­று­முன்­தினம் திரு­மணம் நடப்­ப­தாக முடி­வா­னது.

திரு­ம­ணத்­துக்கு முதல் நாள் இரவு திரு­மண வர­வேற்பு விருந்து இடம்­பெற்­றுள்­ளது. மண­மகன் ராஜு தனது குடும்­பத்­தி­ன­ருடன் மிக தாம­த­மாக மண்­ட­பத்­துக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து உடனே அவர்­க­ளுக்கு உணவு பரி­மா­றப்­பட்­டது. அப்­போது அவர்கள் சாப்பாட்டில் ரசம் போதாது என கேட்­டுள்ளனர். ரசம் முடிந்து விட்­ட­தாக பெண் வீட்டார் கூறி­யுள்­ளனர்.

உடனே மண­மகன் குடும்­பத்­தினர் ஆவே­ச­ம­டைந்­து பெண் வீட்­டா­ரிடம் தக­ராறு செய்­துள்­ளனர். பெண்­வீட்டார் எவ்­வ­ளவோ கூறி சம­ரசம் செய்­துள்­ளனர்.

ஆனால், மண­மகன் வீட்டார் சமா­தா­ன­ம­டை­யாமல் மண்­ட­பத்தில் அவர்­க­ளுக்கு ஒதுக்­கிய அறைக்கு சென்­றுள்­ளனர்.

மறுநாள் அதி­காலை நலுங்கு நிகழ்ச்­சிக்­காக மண­மகன் குடும்­பத்­தி­னரை அழைப்­ப­தற்­காக அவர்­க­ளது அறைக்கு சென்­ற­போது அங்கு மண­ம­கனை காண­வில்லை.

தனது பெற்றோர் மற்றும் உற­வி­ன­ருடன் இர­வோடு இர­வாக மண்­ட­பத்தை விட்டு வெளி­யே­றி­யுள்­ளமை தெரிய வந்­துள்­ளது. இதனால் திரு­மணம் நின்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து சௌமி­யா­வுக்கு வேறு ஒருவருடன் திருமணம் இடம் பெற்றுள்ளது.

ரசம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது பெண் வீட்டார் முறைப்பாடு செய்துள்ளனர்.

வைனை நீக்காததால் பிரான்ஸ் அதிபருடனான விருந்தைத் தவிர்த்தார் ஈரான் அதிபர்

Image title

விருந்து உபசாரத்தின் போது உணவுப் பட்டியலிலிருந்து வைனை (Wine) அகற்ற மறுத்ததால் பிரான்ஸ் அதிபருடனான விருந்தைத் தவிர்த்துள்ளார் ஈரான் அதிபர்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மேற்கத்திய நாடுகள் சமீபத்தில் விலக்கிக்கொண்டன.

இதையடுத்து, வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி, சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்தார்.

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களில் ஹசன் ரவுகனி கையெழுத்திட்டார்.

இதனையடுத்து, இரு நாட்டு அதிபர்களும், பாரீஸ் நகரத்தில் விருந்து உண்ண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், விருந்து ஹலால் முறைப்படி இருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஹசன் ரவுகனி தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது.

மேலும், உணவுப் பட்டியலில் வைன் இடம்பெறக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. மேலை நாடுகளில் வைன் கௌரவமிக்க பானமாகக் கருதப்படுவதால் அதை நீக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. இதனால், விருந்து நிகழ்ச்சியை ஹசன் ரவுகனி இரத்து செய்துவிட்டாராம்.

ஆனால், சமீபத்தில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி இத்தாலி சென்றிருந்தபோது, அவர் கேட்டுக்கொண்டபடி அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IS பயங்கரவாத இயக்கத்தில் இலங்கையர் – வீடுகளை சுற்றிவளைத்த படையினர்!

Image title

இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஐ.எஸ் தீவிரவாதியொருவரின் வீடுகளில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஹமட் உனைஸ் மொஹமட் அமீன் என்ற குறித்த , 41 வயதான இலங்கையர் , ஐ.எஸ் இயக்கத்தில் இணையும் பொருட்டு 2014 ஆம் ஆண்டில் சிரியாவுக்கு சென்றுள்ளார்.

மேலும் தற்போது ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவு தேடும் பிரச்சார காணொளியொன்றிலும் தோன்றியுள்ளார்.

இதன்மூலமே அவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெல்பேர்ன் நகரில் உள்ள அவரது இரு முன்னாள் மனைவிகளின் வீடுகளுமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.எஸ் இயக்கத்திற்கு சுகாதார ரீதியான உதவிகள் தேவைப்படுவதாகவும் , மருத்துவ அறிவு கொண்ட இளைஞர்கள், யுவதிகள் , அவ்வியக்கத்துடன் இணைந்து உதவிகளை புரியுமாறு குறித்த காணொளியில் கோரப்பட்டுள்ளது.

அவர் தான் மருத்துவர் எனவும் வாராந்தம் 500 நோயாளிகளுக்கு மருத்துவ உதவிபுரிவதாகவும் குறித்த காணொளியில் தெரிவிக்கின்றார்.

எனினும் அவர் மருத்துவ பயிற்சி பெறாதவர் எனவும் , விளையாட்டு தொடர்பில் டிப்ளோமா ஒன்றை பெற்றுக்கொண்டவர் மட்டுமே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுமட்டுமன்றி , குறித்த காணொளியில் அவுஸ்திரேலியா, ரஸ்யா , இலங்கை , டுனீசியா உட்பட பல்வேறு நாட்டிலிருந்து மருத்துவர்கள் தம்மோடு இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமீன் 2001 ஆம் ஆண்டு மாணவராக அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ளதாகவும் , பின்னர் அந்நாட்டு பெண்ணை மணம் முடித்து குடியுரிமை பெற்றுக்கொண்டவர் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலகுரக ஹெலிகாப்டரில் கைக்குழந்தை உற்பட 5 பேர் பலி

Image title

குழந்தைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கஜகஸ்தானின் தெற்கு மலைப்பாங்கான பிரதேசத்திற்கு அண்மையில் இடம் பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு மாத பெண்குழந்தை ஒன்றும் அவரது தாயும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் காணாமல் போன MD-600N இலகுரக ஹெலிகாப்டரில் பலியான கைக்குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தருணத்தில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கல் எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் தீவிரம் காட்டியுள்ள ஸிக்கா வைரஸ்: 2 ஆண்டுகளுக்கு கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்

கொசு மூலம் பரவும் ஸிக்கா வைரஸ் காய்ச்சல் குழந்தைகளின் மூளையைப் பாதிக்கிறது என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இன்னும் 2 ஆண்டுகளுக்கு கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன்குனியா போல் இப்போது பல நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது ஸிக்கா வைரஸ் காய்ச்சல்.

அமெரிக்கக் கண்டத்தில் மாத்திரம் 20 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. கனடா, சிலி தவிர அக்கண்டத்தில் உள்ள ஏனைய அனைத்து நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரசால் பிரேசிலில் 4000 பச்சிளம் குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஸிக்கா வைரஸ் தாக்கினால் இலேசான காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். இருப்பினும் 80 சதவீதமானவர்களுக்கு எவ்வித அறிகுறியும் தென்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுளால் ஸிக்கா வைரஸ் தாக்குதல் பாதிப்பைக் கண்டறிவது மிகவும் சிரமம். இந்த வைரஸ் பற்றிய ஆய்வுகள் தற்போதுதான் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் ‘மைக்ரோசெபாலி’ பாதிப்புடன் பிறக்குமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசெபாலி பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறப்பர். இதை வாழ்நாள் முழுவதும் சிகிச்சையால் சரி செய்யவே முடியாது. பாதிப்பு தீவிரமாக இருந்தால், அந்த குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை அளிக்க வேண்டியிருக்கும்.

இதனால் எல் சல்வடார் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் பெண்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்கு கருத்தரிப்பதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஸிக்கா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

டென்மார்க்கின் அகதிகள் சட்டத்துக்கு ஐ.நா. கண்டனம்

Image title

டென்­மார்க்­கிற்குச் செல்லும் அக­தி­களின் எண்­ணிக்­கையைக் குறைக்கும் நோக்கில், அந்­நாட்டு நாடா­ளு­மன்றம் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் ஒன்றை ஏற்­றுக்­கொள்ள எடுத்த முடி­வுக்கு, ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

அக­தி­களின் சில உடை­மை­களைக் கைப்­பற்ற அதி­கா­ரி­க­ளுக்கு அந்தச் சட்­டத்தின் கீழ் அதி­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அக­தி­களின் 1,500 டொலர்­க­ளுக்கு மேற்­பட்ட சொத்­துக்­களை பறி­முதல் செய்ய வழி செய்யும் இந்தச் சட்டம், அக­தி­களின் உற­வி­னர்கள் டென்மார்க் வரு­வ­தையும் கடி­ன­மாக்­க­வுள்­ளது.

அக­தி­களால் நாட்­டிற்கு ஏற்­படும் செலவை ஈடு­கட்ட, அந்த நட­வ­டிக்கை உதவும் என்று டென்மார்க் கூறு­கி­றது.

இத­னி­டையே ஐ.நா. மற்றும் பல சர்வதேச அமைப்புகள் இந்த சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

70 முதலைகளை கடத்திச் சென்ற தில்லாலங்கடி நபர் கைது

Image title

வியட்நாமிய எல்லைக்கு அருகில், ஃபான்சென்ங்காங் எனும் இடத்தில் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்த சீன பொலிஸார் தற்செயலாக லொறியொன்றை நிறுத்தி சோதனையிட்டபோது இம்முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்படி லொறியில் என்ன வகையான பொருட்கள் என பொலிஸார் விசாரித்தபோது, லொறியின் சாரதி கூறிய பதிலும் லொறியிலுள்ள பொருட்களுக்கும் முரண்பாடானவையாக இருந்தன.

பின்னர் அந்த லொறியை சோதனையிட்டபோது அதற்குள் உறைந்த நிலையில் 70 முதலைகளும் மேலும் 88 முதலைகளின் வால்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து மேற்டி முதலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சியாமிஸ் ரகத்தைச் சேர்ந்த இம்முதலைகள் வியட்நாம் இந்தோனேஷியா, புரூணை, மலேஷியாவின் கிழக்குப் பிராந்தியம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.Image title

தோலை பெறுவதற்காக அவை வேட்டையாடப்படுவதாகவும் இதனால் இவை அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எச்சரிக்கை : குடிபானங்களினால் உடல்பருமன் அதிகரிப்பு

Image title

ஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைப் பருவத்தில் உடல் பருமனாதலை குறைப்பதற்கான முக்கியத்துவம் குறித்த அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் இந்த பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

1990 முதல் உலக அளவில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 33 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் 4 கோடி சிறுவர்களில் அரைவாசிப் பேர் 5 வயதாவதற்கு முன்னரே கடும் பருமனாகிவிடுவதாகவும், இதற்கு வளர்ந்து வரும் நாடுகளில் ஆரோக்கியமற்ற மற்றும் சர்க்கரை கலந்த குடிபானங்களின் தீவிர சந்தைப்படுத்தலே காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது சிறுவர்கள் வெளியில் விளையாடுவதை தவிர்த்து, இணைய விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமையும் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருட்களை ஈர்க்கும் தோலுடைய விநோத மனிதன் "ஜாமி கீட்டன்"

Image titleப்ளோரிடாவைச் சேர்ந்த ஜாமி கீட்டன் (Jamie Keeton) தலையில் கப், கேன், பாட்டில் போன்ற பொருட்கள் ஒட்டிக்கொள்கின்றன.

இதற்கென அவர் ஒட்டும் பசைகள் எவற்றையும் பயன்படுத்துவதில்லை.

இவரது தோலில் உள்ள துளைகள் அவற்றை உறிஞ்சிக் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

சிறு வயது முதலே அவருக்கு இந்த சக்தி உள்ளது. பைன் மரங்களில் சிறு வயதில் ஏறி விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்ததால் மரத்தின் சாறு காரணமாக பொருட்கள் ஒட்டிக்கொள்வதாக அனைவரும் நினைத்துள்ளனர்.

20 வயதில் தான் தனது தோல், பொருட்களை ஈர்த்துக்கொள்வதை அறிந்திருக்கிறார் ஜாமி கீட்டன்.

“நல்ல வெய்யில் காலம். முதல் முறை மொட்டை அடித்திருந்தேன். குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று சோடாவை வாங்கித் தலையில் வைத்தேன். நண்பர்கள் பந்தை எறிந்து, சோடாவைத் தள்ளிவிட்டனர்.

சோடா பாட்டில் சாய்ந்ததே தவிர கீழே விழவில்லை. பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக்கொண்டது. சோடா மட்டும் கீழே கொட்டி விட்டது. எல்லோரும் இதைக் கண்டு சிரித்தனர். பல பொருட்களை வைத்துப் பார்த்தேன்.

எல்லாமே ஒட்டிக்கொண்டன. ஒக்டோபஸ் உணர்கொம்புகள் போல என் தலை அனைத்தையும் இழுத்துக்கொண்டது. மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவருக்கும் காரணம் தெரியவில்லை. பின்னர் சில மருத்துவர்கள் ஏதோ குறைபாடு என்றார்கள். அமெரிக்காவிலேயே இந்தக் குறைபாடு உள்ள ஒரே மனிதன் நான்தான்.

இந்தியாவிலும் தென் அமெரிக்காவிலும் இருவர் இருக்கிறார்கள்”. என தெரிவித்துள்ளார் ஜாமி.

இன்று இவர் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரும் பிரபலம். வாரத்திற்கு ஒன்றரை இலட்சம் முதல் ஐந்தரை இலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

சிலர் அவர்களின் பொருட்களை ஜாமியின் தலையில் வைத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சிலர் அவர் அணியும் ஆடையில் விளம்பரம் செய்கிறார்கள்.

“சமீபத்தில் கின்னஸ் சாதனையையும் நிகழ்த்திவிட்டார் ஜாமி”.

செல்போன் வெடித்து தம்பதி பலி ; மகன் கவலைக்கிடம் – தமிழகத்தில் சம்பவம்

Image titleமெத்­தையில் செல்­போனை வைத்து சார்ஜ் செய்­ததால் செல்போன் வெடித்து உறங்கி கொண்­டி­ருந்த தம்­பதி உயி­ரி­ழந்­துள்ள சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் வியாசர்பாடி பகு­தியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்­து­வரும் தினேஷ் அதி­காலை 5 மணிக்கு எழும்­பு­வ­தற்­காக செல்­போனில் அலாரம் தயார் செய்து வைத்­தி­ருந்தார்.

அப்­ப­டியே செல்­போனை மெத்­தையில் வைத்து சார்ஜ் போட்டபடி குடும்பத்தினர் உறங்கச் சென்­றுள்­ளனர்.

பின்னர் அதி­காலை 5 மணி அளவில் செல்­போனில் அலாரம் அடித்த­போது அது பயங்­கர சத்­தத்­துடன் வெடித்து சித­றி­யுள்­ளது.

அப்­போது செல்­போனும் தீப்­பி­டித்து எரிந்­து செல்போன் வைக்­கப்­பட்­டி­ருந்த மெத்­தையும் தீப்­பி­டித்­துள்­ளது.

பின்னர் தீ கட்­டி­லுக்கும் பரவி வீடு முழுக்க பற்­றி­யுள்­ளது.

இந்­நி­லையில் உறங்கி கொண்­டி­ருந்த தினேஷின் தாய், தந்தை ஆகிய 3 பேரும் அல­றி­ய­டித்துக் கொண்டு தூக்­கத்­தி­லி­ருந்து எழுந்­துள்­ளனர்.

எனினும் அவர்­களால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடி­ய­வில்லை.

மூவரின் உட­லிலும் தீ பற்றி­யுள்­ள நிலையில் வீட்­டுக்­குள்­ளேயே தீயில் சிக்­கியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த வியா­சர்­பாடி தீய­ணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்­தனர்.

இத­னை­ய­டுத்து 3 பேரும் உட­ன­டி­யாக கீழ்ப்­பாக்கம் அரச வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டனர். அங்கு அவர்­க­ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

ஆனால், நேற்று முன்­தினம் நள்­ளி­ரவில் ராஜேந்­தி­ரனும், நேற்று அதி­கா­லையில் ராணியும் அடுத்­த­டுத்து உயிர்­ழந்­துள்­ளனர்.

உயி­ருக்கு ஆபத்­தான நிலையில் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

‘அரண்மனை 2′ படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல்

Image title

டிகர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை எடுத்தவர் சினிமா தயாரிப்பாளர் முத்துராமன். இவர், சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் தயாரித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையை அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து ‘அரண்மனை’ என்ற பெயரில் இயக்குநர் சுந்தர்.சி படம் எடுத்தார். என்னுடைய படத்தின் கதை என்பதால் அதை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே, ‘அரண்மனை’ படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் முத்துராமன், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

‘அரண்மனை-2’ என்ற பெயரில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். விரைவில் அப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

என்னுடைய ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதை அடிப்படையில்தான் இந்தப் படமும் உருவாகியுள்ளது. என் அனுமதியின்றி இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்கியுள்ளார். எனவே. ‘அரண்மனை-2’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி டேனியல் அரிபாபு முன்பு விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘இதுதொடர்பாக மனுதாரரும், எதிர் மனுதாரரும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28 ஆம் திகதி முடிவு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மாயமான மலேசிய விமான தேடலில் மேலும் பிரச்சனை: சோனார் கருவி மாயம்

Image title

தெற்கு இந்திய பெருங்கடலில் நீருக்கு அடியில் மாயமான மலேசிய விமானத்தை தேட பயன்படுத்தப்பட்டு வந்த சோனார் கருவி மாயமாகிவிட்டது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மலேசிய தலைநகரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது.

விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

விமானம் விழுந்ததாக கூறப்படும் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தலைமையில் தேடுதல் பணி நடந்து வருகிறது. 2 ஆண்டுகளாக தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் தாய்லாந்தில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அது மலேசிய விமான பாகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தெற்கு இந்திய பெருங்கடலில் நீருக்கு அடியில் விமான பாகங்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டோஃபிஷ் என்ற சோனார் கருவி மாயமாகியுள்ளது. கடலுக்கு அடியில் இருந்த மணல் மேட்டில் மோதி கருவியின் கேபிள் வயர் அறுந்துவிட்டது. இதனால் கருவி தற்போது கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. அந்த கருவி நிச்சயம் தேடிக் கண்டுபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.