ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையினர் சஜித் பிரேமதாஸவுடன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எப்படியாவது அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் தீர்மானம் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அந்த முடிவை கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் ஊடாக அறிந்துக்கொள்வது உசிதமானது என அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மந்திரி பதவியை மீண்டும் பொறுப்பேற்றதற்காக கட்சி போராளிகள் ஏன் தலைவரை விமர்சித்தார்கள் ?

(முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது)

தலைவர் அமைச்சு பொறுப்பை மீண்டும் ஏற்றதனால் அதன் மூலம் சில சலுகைகளை அனுபவிக்கும் பொருட்டு நாங்களும் தலைவரை பாராட்டி இருக்கலாம். அல்லது குறைந்தது எதுவும் பேசாமல் இருந்திருக்கலாம். இதனைத்தான் பலர் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.

ஆனால் எங்கள் தலைவர் ஒரு நெல்சன் மண்டேலா, ஒரு பிரபாகரன் அல்லது குறைந்த பட்சம் ஒரு அஸ்ரபாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்கின்றோம்.

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நாங்கள் பதவிகளை ஏற்கமாட்டோம் என்று அதியுயர்பீட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டு ஒருவாரம் பூர்த்தியடையாத நிலையில், எந்தவித பிரச்சினைகளும் தீர்க்கப்படாமலேயே திடீரென பதவியை ஏற்றுக்கொண்டது போராளிகள் மத்தியில் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அவ்வாறு பதவியை ஏற்பதாக இருந்தால் குறைந்தபட்சமாக ஏதாவது பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கிய பின்பு பதவியை ஏற்றிருக்கலாம்.

அல்லது மீண்டும் அதியுயர்பீடத்தினை கூட்டி பதவியை ஏற்பதாக தீர்மானித்துள்ளதாக அறிக்கையினை வெளியிட்டுவிட்டு பதவியை ஏற்றிருக்கலாம். ஆனால் இவைகள் எதுவும் இல்லாமல் திடீரென பதவியை ஏற்றதனால் அதியுயர்பீடம் என்பது ஓர் பெறுமதியற்ற ஒன்றாகிவிட்டது.

இது சமூகத்தின் மீதும், கட்சி மீதும் அக்கறைகொண்ட எவராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

எமது சமூகத்தில் தொண்ணூறு வீதமானவர்கள் நடிகர்கள். தங்களது வாசிக்கும், சந்தர்பத்துக்கும் ஏற்றாற்போல் ஜால்ரா போடுவார்கள்.

அவ்வாறானவர்களுக்கு எமது சமூகத்தின் எதிர்கால பாதுகாப்பு, இழந்த காணிகளை மீட்பது போன்ற எதனைப்பற்றியும் கவலையில்லை. மாறாக தாங்களும், தங்கள் குடும்பமும் உல்லாசமாக வாழ்ந்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

ஆனால் சமூகத்தின் எதிர்காலம் பற்றி ஆழமாக சிந்திக்கின்றவர்கள் எவரும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும், பகட்டுக்கும் சோரம்போக மாட்டார்கள்.

எப்போதும் பேரினவாத அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வருவதில்லை. சிறுபான்மை தலைவர்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கி முழு சமூகத்தையும் சமாளிக்க முற்படுவார்கள்.

அந்தவகையில் அமைச்சர் பதவியுடன் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளும், கட்டடங்களும் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு அபிவிருத்தி செய்துள்ளதாக கதையை முடித்துவிடுவார்கள்.

ஆனால் சிறுபான்மை மக்களின் அரசியல் சார்ந்த உரிமைகளுக்கான தீர்வினையோ, அல்லது நிரந்தர பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையோ அவர்கள் செய்ய முற்படுவதில்லை.

அதனால்தான் எங்களது பிரச்சினைகளுக்கு முன்கூட்டியே தீர்வுகள் வழங்கப்படாமல் மந்திரி பதவிகளை பெற்றுக்கொண்டால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்ற அச்சத்தினாலேயே அமைச்சர் பதவியினை பெற்றுக்கொண்டதை நாங்கள் வண்மையாக கண்டித்தோம்.

எனவேதான் சமூகத்தை பற்றி பேசாமல் நாங்கள் தலைவரின் அமைச்சு பதவி மூலமாக ஏதாவது சலுகைகளை எதிர்பார்த்து வாய்மூடி மௌனியாக இருந்திருந்தால் அது எமது சமூகத்துக்கு செய்கின்ற மாபெரும் துரோகமாகும்.

தலைவர்களின் அரசியல் தவறுகளை விமர்சனம் செய்வது அவர்கள் மீண்டும் தவறு செய்யக்கூடாது என்பதற்காகவேயன்றி வேறு எந்த பின்னணியும் இல்லை. இது புத்தி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். அற்ப பதவிகளுக்காக ஜால்ரா போடுகின்றவர்களுக்கு புரியாது.

பதவி துறக்கவுள்ள 5 முக்கிய இளம் அரசியல்வாதிகள் – கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு இம்ரான் போட்டி?

மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட சில ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இராஜினாமா செய்யவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய பின்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணம் – சுஜீவ சேனசிங்க (அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்)

தென் மாகாணம் – புத்திக பத்திரண (பதில் அமைச்சர்)

மத்திய மாகாணம் – வசந்த அலுவிகாரே (இராஜாங்க அமைச்சர்)

வடமேல் மாகாணம் – ஜே.சி. அலவத்துவல (இராஜாங்க அமைச்சர்),

நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரம் தெரிவிக்கின்றன.

தலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி – கருவுக்கு ரணில் சாதக பதில்..?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவை நிறுத்துமாறு அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஓரளவுக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள கரு ஜயசூரிய விரும்பவில்லை என்பதால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய போட்டியிடலாம் எனவும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் வகிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை வழங்கினால், மட்டுமே சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.

ரணில் – மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு – அம்பலப்படுத்தும் அநுரகுமார

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால், இருவரும் தவறிழைத்துவிட்டனர்.

இலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசு திரட்டியது.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நண்பகல் 12. 10 முதல் 12.30 மணிவரையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

1949இல் இருந்து இற்றைவரை அரசுகளுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்” – என்றார்.

முஸ்­லிம்­க­ளிடத்தில் “ஹீரோ” ஆகும் மங்கள – அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பொய் பிர­சா­ரங்கள் மற்றும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவைத் தவிர எந்­த­வொரு ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்­களும் எமக்கு உதவ முன்­வ­ர­வில்லை என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டினர்.
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு முன்னர் அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஆளும் தரப்பு முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­த­போதே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.
இது தொடர்பில் திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் விப­ரிக்­கையில்,
முஸ்­லிம்கள் சம­கா­லத்தில் எதிர்­நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பில் அனை­வ­ரு­மாக இணைந்து சுட்­டிக்­காட்­டினோம். அத்­துடன் வேண்­டு­மென்றே பாது­காப்பு கெடு­பி­டிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை மற்றும் சிறு குற்­றங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்டு பயங்­க­ர­வா­திகள் போல் சித்­தி­ரிக்­கப்­ப­டு­வது குறித்து பிர­த­மரை தெளி­வு­ப­டுத்­தினோம்.
இதன்­போது ஐ.தே.க. தவி­சாளர் கபீர் ஹாசிம் மிகவும் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கதைத்தார். நாம் வெறு­மனே இரா­ஜி­னாமா செய்யக் கூடாது. எமது இரா­ஜி­னாமா நாட்­டுக்கு நல்­ல­தொரு பாடத்தை சொல்ல வேண்டும் என்­பதை பிர­த­ம­ரிடம் தெளி­வு­ப­டுத்­தினார். அத்­துடன் பயங்­க­ர­வா­தத்தை தடுப்­ப­தற்­கான ஆரம்ப நட­வ­டிக்­கையை தான் முன்­னெ­டுத்­த­போது தடை ஏற்­பட்­டது. எனினும், விசா­ர­ணை­க­ளுக்­கான ஆரம்பப் புள்­ளியை நான் காட்­டி­யி­ருந்தும் நட­வ­டிக்கை பொறுப்­புடன் மேற்­கொள்­ளப்­ப­டா­த­தையும் சுட்­டிக்­காட்­டினார்.
மு.கா. தலைவர் ஹக்கீம் அநா­வ­சிய கைதுகள் மற்றும் அப்­பா­விகள் சிறு சிறு குற்­றங்­க­ளுக்­காக பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் இருப்­பது பற்­றியும் தெளி­வு­ப­டுத்­தினார்.
தான் நிர­ப­ராதி என்­பதை அர­சி­யல்­வா­தி­களே, அதா­வது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­தி­களே ஏற்­றுக்­கொள்­கி­றார்கள் இல்லை என்­பதை இதன்­போது அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யுதீன் சுட்­டிக்­காட்­டினார். மட்­டு­மன்றி, தன்னை தான் குற்­ற­மற்­றவன் என்­பதை விப­ரிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்­தையும் ஐ.தே.க. அமைச்­சர்கள் தரு­வ­தில்லை என்றும் குறிப்­பிட்டார்.
இதே­வேளை, அமைச்சர் மங்­கள சம­ர­வீர முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி துறப்­ப­தற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்டார். அப்­ப­டி­யானால் முதலில் தான் அமைச்சுப் பத­வியை தூக்கி எறி­வ­தாக ஆவே­சத்­துடன் கூறினார். அமைச்சர் மனோ கணே­சனும் இவ்­வாறு கடு­மை­யாக எதிர்ப்பை தெரி­வித்தார்.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்கள் முஸ்­லிம்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­போது எமக்கு உதவ முன்­வ­ர­வில்லை என ஐ.தே.க.வின் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இதன்­போது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தனர். அமைச்சர் மங்­கள சம­ர­வீர மட்­டுமே துணிந்து எமக்­காகப் பேசினார். அவரைப் போன்ற அமைச்சர்கள் இருந்­தி­ருந்தால் இன­வா­தி­க­ளுக்கு நல்ல பாடத்தை கற்­பித்­தி­ருக்­கலாம். முஸ்­லிம்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் பிர­சா­ரங்­க­ளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும், ஆனால் எமது தரப்பினர் அதனை செய்யத் தவறி விட்டனர் என்பதை சுட்டிக்காட்டியதாக இம்ரான் மஹ்ரூப் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

என் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் – ரிஷாத் எம் பி தெரிவிப்பு

(ஊடகப்பிரிவு)
பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் எம் பி    தெரிவித்தார்.
அவ்வாறான எந்த விசாரணைகளுக்கும் முகம்கொடுக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் தயார் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று மாலை (06) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது “நான் எந்த தவறும் செய்யவில்லை. அவ்வாறு நிருபிக்கப்பட்டால் அதற்கான உச்ச தண்டனையாக, அது மரண தண்டனையாக இருந்தாலும் தாருங்கள்” எனக்கூறிய அவர்  “என்னைக் காட்டி என்  சமூகத்தை பலியாக்காதீர்கள். முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை அழிக்காதீர்கள் உங்களின் அரசியல் தேவைகளுக்கு நாங்கள்  உதவி செய்யாத காரணத்தினால் கொடுமைகளை செய்யாதீர்கள். என்றார்
 பதவி , பட்டம், ஆட்சி, அந்தஸ்து, எல்லாம் இறைவனால்  தரப்படுபவை என்ற நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். ஏகாதிபத்திய சதிகாரர்களினால் உருவாக்கப்பட்ட ISIS  இயக்கத்துடன் இலங்கையில் வாழும் 22 இலட்சம்  அப்பாவி முஸ்லிம்களை தொடர்புபடுத்தி அவர்களை அணுவணுவாக சித்திரவதை செய்வதை கைவிடுங்கள்.
ஏதோ ஒரு வகையில் இங்கே ஊடுருவி விட்ட இந்த பயங்கரவாத இயக்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை அவர்களின் மிலேச்சத்தனமான இந்த செயலை நாம் ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாம் இதனை வெறுக்கின்றது. உலக  முஸ்லீம் நாடுகளின் பரம விரோதியான இந்த கயவர் கூட்டத்துடன் இலங்கை முஸ்லிம்களை கோர்க்காதீர்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னர் இந்த இயக்கத்தை இல்லாதொழிப்தற்கு முஸ்லிம்களாகிய நாம் அத்தனை உதவிகளையும் வழங்கினோம். சாய்ந்தமருதில் ஒளிந்திருந்த இயக்கத்தின் சூத்திரதாரிகளை காட்டிக்கொடுத்து, அவர்களாகவே குண்டுகளை வெடிக்க வைத்து அழிவதற்கு வழி வகுத்தோம். எங்கெல்லாம் இவர்கள் ஒளிந்துகொண்டு இருந்தார்களோ அவர்களை காட்டிக்கொடுத்தோம்  கைது செய்வதற்கும் உதவினோம். தற்கொலைதாரி ஒருவரின் மனைவி குண்டு தாக்குதல் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் இதனை  கேள்வியுற்று அவரது கணவரின்  ஆவணங்களையும் ஒளிப்பதிவு சாதனங்களையும் பொலிஸில் ஒப்படைத்து விசாரணைக்கு உதவினார்.
நாங்கள் தலைமைத்துவத்திற்கு  கட்டுப்பட்ட ஒரு சமூகம். ஜம்மியத்துல் உலமாவின் கீழ் எமது சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒருமித்து பயங்கரவாத நடவடிக்கையை எதிர்த்தோம் . கண்டித்தோம். எனினும் எமது சமூகத்தை எப்படியாவது கருவறுக்க வேண்டுமென நீண்ட காலமாக துடித்து திரியும் இனவாதக்கூட்டம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்மை இலக்கு வைத்து, துரத்தி துரத்தி தாக்குகின்றது. எமது உள்ளத்தை உடைக்கின்றது. நெஞ்சை பிளக்கின்றது விஷத்தை கொப்பளிக்கின்றது.
குண்டுக்தாக்குதல் நடந்து சரியாக 21 நாட்களின் பின்னர் இவர்களின் கயமைத்தனம்   சிலாபத்திலிருந்து தொடங்குகின்றது முகநூல் பதிவை  விளங்கிக்கொள்ள முடியாத இந்த அறிவிலிகள் தமது காடைத்தனத்தை கட்டவிழ்த்து. விடுகின்றனர் வடமேல் மாகாணத்தில் அத்தனை முஸ்லிம் கிராமங்களும் துவம்சம் செய்யப்படுகின்றது. தும்மல சூரிய, நாத்தாண்டிய, நிக்கவரட்டிய, கொட்டரமுல்லை, மினுவாங்கொட ஆகியவற்றிலும் இவர்கள் தமது கைவரிசைகளை காட்டினர்.
பள்ளிகள் வீடுகள், வியாபாரஸ் தலங்கள், எரிக்கப்பட்டும் தகர்க்கப்பட்டும் கிடக்கின்றன. கொட்டரமுல்லையில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வாளால் வெட்டப்பட்டு கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். எனினும் சட்டம் இவர்களுக்கு எதிராக இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வேதனையானது.
52 நாட்கள் சட்டவிரோத அரசாங்கத்துக்கு நான் உதவவில்லை என்பதற்காக பழி தீர்க்கப் பார்க்கின்றனர். எங்களை பதவி நீக்க வேண்டும் என்று தேரர் ஒருவர் கண்டியில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது இனவாத பௌத்த மத குரு மாரும் கடும்போக்கர்களும் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை பழி தீர்க்க முயற்சித்தனர். தலதா மாளிகைக்கு முன்னால் சென்ற 3 முஸ்லிம் இளைஞர்களை இந்த காடையர்கள் அடித்து துன்புறுத்தினர். கடைகளை மூட வைத்து நாட்டிலே ஒரு வன்முறை சூழல் ஒன்றை உருவாக்க முஸ்தீபு செய்தனர்.
எனவே தான் சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் நாட்டின் அமைதி கருதியும் அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், கபீர் காசிம், ஹலீம்,  மற்றும் நான் உட்பட இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர், மற்றும்  ஆளுநர்கள் எமது  பதவிகளை தூக்கி எறிந்தோம்  நாங்கள் யாருக்கும் பயந்து ராஜினாமா  செய்வில்லை.  இந்த நாட்டில் மீண்டும் இனக்கலவரமோ யுத்தமோ இடம்பெறக்கூடாது என்ற சமூக கடப்பாடும் பொறுப்பும் எமக்கு இருக்கிறது.
ஆனால் தேசப்பற்றாளர்கள் என கூவித்திரியும் கடும்போக்கர்கள் முஸ்லிம் கடைகளுக்கு போக வேண்டாம் எனவும் பகிஷ்கரிக்குமாறும் காட்டுச்சட்டம் போடுகின்றனர். அப்படியானால்  முஸ்லிம் நாடுகளை பகைத்து கொண்டு இவர்களால்  வாழ முடியுமா? அங்கிருந்து தானே பெற்றோல் வருகின்றது. சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார்கள். சில மத குருமார்களின் பேச்சுக்கள் கடும் போக்குவாதத்தை அப்பட்டமாக பிரதி பலிக்கிறது. ஒரு கூட்டம் தொடர்ந்தும் சதி செய்கின்றது. அவர்களை பாதுகாக்கின்றீர்கள். ஆனால் பயங்கரவாதத்தை வெறுக்கும் எங்களுக்கு தொடர்ந்தும் தொல்லை தருகின்றீர்கள்.
இந்த நாட்டிலே இன வாதிகளுக்கும் கடும்போக்கு வாதிகளுக்கும் ஒரு சட்டமும் சாதாரண மக்களுக்கு இன்னொரு சட்டமுமா பிரயோகிக்கப்படுகின்றது அவசர காலச்சட்டம் அமுலில் இருக்கும் போது இந்த அட்டூழியக்காரர்களை அடக்காமல், கைகட்டி, வாய் பொத்தி பொலிசாரும் படையினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஜனாதிபதியோ, பாதுகாப்பு பிரதி அமைச்சரோ எந்த நடவடிக்கையும்  எடுக்கத் துணிகின்றார்கள் இல்லை.
ஆனால் சிறு சிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். கப்பல் சுக்கான் பொறிக்கப்பட்ட  ஆடை அணிந்த பெண் ஒருவர் சக்கரம் அணிந்தார்  என  கைது செய்யப்பட்டு 21 நாட்களின் பின்னரே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
திவயின பத்திரிகை வைத்திருந்த மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்கள் என்ற சாட்சியங்களுடன்  கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானால்  இந்த நாட்டில் சட்டம் சமனாக பேணப்படவில்லையா என இந்த உயர் சபையில் கேட்கின்றேன்

பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் ரணில் தீர்மானம்?

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் முக்கியமான சந்திப்புக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பு எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது என ‘தமிழன்’ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல், பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், முக்கியமான இதர விடயங்கள் தொடர்பிலும் இங்கு பிரதமர் பேசவுள்ளார்.

உடனடித் தேர்தல் ஒன்றுக்குச் செல்வது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ஆராய்ந்து வருகின்றது எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுமையாக இருக்கிறோம் உள்ளங்களை உடைக்காதீர்கள்! வெளிப்படையாக பேசினார் ரிஷாட்

#. குண்டு தாக்குதலின் பின்னரான என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமையுங்கள் .

#. பாசிச தற்கொலை குண்டு தாரிகள் போன்று செயற்பட – முஸ்லிம் பெயர்தாங்கிய வேறு யாரேனும் இளைஞர்கள்
நினைத்தால் அவர்களுக்கு முஸ்லிம் மையவாடியில் இடமில்லை.

#. முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை தடுத்த அஷ்ரபையும் இச்சபையில் விமர்சிப்பது கவலைக்குரியது.

#. உணர்ச்சிகரமான பேச்சுக்கள் விடிவைத் தராது.

#. திகனை சம்பவத்தின் போது இப்போது டீவீக்களில் காட்டப்படும் கத்தி , வாள்களை எந்தவொரு முஸ்லிமாவது தூக்கி வந்தாரா?

#. பொறுமையாக இருந்த போதிலும் உள்ளங்களை உடைக்கின்றீர்கள்.

#. ஜனாதிபதியின் பேச்சு ஆறுதலை தருகிறது. அவரை பாராட்டுகின்றேன்.

#. எஸ்பி திஸாநாயக்கவை நீதிமன்றத்தில் சந்திப்பேன் .

#. நான் ஹலாலாக உழைத்து வாழ்பவன்.எனது சொத்து விபரங்களை பாராளுமன்றத்தில் காணலாம்.

#. சில ஊடகங்கள்- ஊடக தர்மத்திலிருந்து தூரமாகிவிட்டது.

#. என்மீது வீண்பழி சுமத்த வெட்கமில்லையா?

#. பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்தவர்கள் சாய்ந்தமருது முஸ்லிம் மக்களே

3 பிரதான முஸ்லிம் அமைப்புக்கள், நடத்திய ஊடகவியலாளர் மாநாடு

முஸ்லிம் அரசியல்வாதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை (09) ஊடகவிலாளர் மாநாடொன்றை நடத்தின.

நாட்டின் தற்போதை நிலவரம், பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு, மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்பனவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில முஸ்லிம்களுக்கு எதிராக, விசம் கக்கினான் இனவாதி விமல் வீரவன்ச

நாட்டின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பினர் விமல் வீர­வன்­ச­விற்கும் ஆளும்­கட்சி முஸ்லிம் அமைச்­சர்கள் மற்றும் எம்.பிக­ளுக்கும் இடையில் கடும் வாக்­கு­வாதம் நில­வி­யது. உங்­களால் ஒருதாய் மக்­களாய் இந்த நாட்டில் இருக்­க­மு­டியும் என்றால் வாழுங்கள் இல்­லையேல் நீங்கள் அனை­வரும் எங்­கி­ருந்து வந்­தீர்­களோ அந்த இடத்­துக்கே போய்­வி­டுங்கள். இந்த நாட்­டினை நாச­மாக்க வேண்டாம் என ஆவே­ச­மாக சபையில் தெரி­வித்தார் விமல் வீர­வன்ச எம்.பி.

பாரா­ளு­ம­ன்றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற நாட்டின் பாது­காப்பு நிலை­வரம் தொடர்­பான சபை ஒத்தி வைப்பு வேளை விவா­தத்தின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போது அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஜெனிவா யோச­னை­க­ளுக்கு அமைய 30/1 பிரே­ர­ணையில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளது. அதனை பயன்­ப­டுத்தி இங்கு வாய்ப்­பு­களை உரு­வாக்கி புதிய பயங்­க­ர­வாத சட்­டத்தை கொண்­டு­வ­ரு­கின்­றது.

பயங்­க­ர­வாத சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்­டு­வந்து இருக்கும் சட்­டத்தை பலப்­ப­டுத்த முடியும். அதை விடுத்து சர்­வ­தேச தேவை­க­ளுக்­கான நகர்­வு­களை இங்கு எடுக்க வேண்டாம். நாம் எதிர்க்­கட்­சி­யாக எமது கட­மையை செய்து வரு­கின்றோம். நாம் ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­யாக இருந்த காலத்தில் இருந்த தவ­று­களை நாம் செய்ய மாட்டோம். இப்­போதும் நாட்டில் ஒரு அச்­சு­றுத்தல் சூழலில் நாம் எதிர்க்­கட்­சி­யாக அர­சாங்­கத்தை நெருக்­க­டிக்குள் தள்­ளாது ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்றோம். அத­னைக்­கூட விளங்­கிக்­கொள்­ளாது நீங்கள் இவ்­வாறு செயற்­படக் கூடாது.

எமது ஜனா­தி­பதி காலத்தில் குண்டு வெடிப்­பதை நிறுத்தி இனி குண்டு வெடிக்­காத நாட்­டி­னையே நீங்கள் பொறுப்­பெற்­றீர்கள். ஆனால் இன்று உங்­களின் நல்­லாட்­சி­யிலும் குண்டு வெடிக்­கின்­றது. ஆகவே இந்த சம்­ப­வங்­க­ளுக்கு ஜனா­தி­பதி, பிர­தமர் அனை­வ­ருமே பொறுப்­புக்­கூற வேண்டும். 2014 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.எஸ். பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் இருந்தும் அதனை தடுக்க முடி­யா­தது ஏன்.

கிறிஸ்­தவ பாட­சா­லைகள் மூடப்­ப­டு­கின்­றன, இஸ்­லா­மிய பாட­சா­லைகள் மூடப்­ப­டு­கின்­றன. ஆனால் சிங்­கள தமிழ் பாட­சா­லைகள் ஏன் திறக்­கப்­ப­டு­கின்­றன. அனைத்து மாண­வர்­க­ளையும் பாது­காக்க வேண்டும். பாட­சா­லைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டாலும் கூட பிள்­ளை­களை பெற்றோர் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்ப மாட்­டார்கள். குண்டு வெடிக்கும் என்ற அச்­சத்தில் அல்ல இந்த அர­சாங்கம் மீதான அவ­நம்­பிக்கை கார­ண­மா­கவே எவரும் வெளியில் வரு­வ­தில்லை. அமை­தி­யாக வாழ விரும்பும் சிங்கள், தமிழ் முஸ்லிம் மக்­களின் வாழ்க்­கையை நாச­மாக்க வேண்டாம்.

யசீர் அர­பாத்தின் வாகன சார­தியை தன்­வ­சப்­ப­டுத்தி மொஸாட் புல­னாய்­வுத்­துறை பணம் கொடுத்­தது. ஏன் கொடுத்­தது என்றால் யாசீர் பற்றி தகவல் பெற்­றுக்­கொள்­ளவே. அதேபோல் தான் இங்கும் தவ்ஹீத் ஜமா­அத்தின் எவ­ரையும் விலைக்கு வாங்கி அவர்­களின் மூல­மாக தக­வலை பெற்­றுக்­கொள்ள அவர்­களின் சில­ருக்கு பணம் வழங்­கப்­பட்­டி­ருக்­கலாம். அ

தேபோல் அமைச்சர் கிரி­யெல்ல வெளி­யிட்ட துண்­டுப்­பி­ர­சு­ரங்களில் ஜனா­தி­ப­தியை குற்றம் சுமத்­தி­யதை போலவே அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இந்தப் பயங்­க­ர­வாத அமைப்­புடன் ரிஷாத் தொடர்பில் உள்ளார் என்ற கார­ணி­களை கூறி­யுள்­ளனர். அதேபோல் தேரர் ஒருவர் ரிஷாத் தான் பயங்­க­ர­வா­தத்தை வளர்ப்­ப­தாக கூறினார். இந்த ஆட்­சியை உரு­வாக்­கிய அனை­வரும் இந்த பயங்­க­ர­வா­தத்­திற்கு பொறுப்­புக்­கூற வேண்டும் என்றார். ‘

இதன்­போது ஆளும் தரப்பில் இருந்த அமைச்சர் ரிஷாத் கடும் சினம்­கொண்டு விமல் வீர­வன்ச எம்.பியுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார். தய­வு­செய்து நீங்கள் கூறிய விட­யங்­களை வாபஸ் பெற்­றுக்­கொள்ள வேண்டும். ஹன்சார்ட் அறிக்­கையில் இருந்து நீக்க வேண்டும். பொய்­யாக கார­ணி­களை கூறி இன­வா­தத்தை தூண்ட வேண்டாம் என்றார்.

இதற்கு பதில் தெரி­வித்த விமல் எம்.பி, இந்த கருத்­துக்­களை நான் கூற­வில்லை, உங்­களின் தலை­வர்கள் தான் கூறு­கின்­றனர். நான் இன­வாதம் பரப்­ப­வில்லை நீங்கள் இந்த நாட்டில் அமை­தி­யாக வாழ விரும்பும் மக்­களை அழிக்க முயற்­சித்து வரு­கின்­றீர்கள். இன்னும் அடிப்­ப­டை­வாதம் குறித்து பேச இட­ம­ளிக்க முடி­யாது. கிழக்கில் உள்ள சகல அடிப்­ப­டை­வாத பாட­சா­லை­க­ளையும் மூட வேண்டும்.

இங்­குள்ள முஸ்­லிம்கள் அரா­பி­யர்கள் இல்லை என்­பதை நினைவில் வைத்­து­கொள்ள வேண்டும். இந்த சமூ­கத்தில் வாழ பழ­கிக்­கொள்ள வேண்டும். தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாக்கும் வஹாப்­வாத பாட­சா­லை­களை மூடுங்கள். சாதா­ரண குடி­ம­கனை தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக மாற்றும் அரபுக் கல்­வியை நிறுத்­துங்கள். சிங்­கள, தமிழ் மக்­க­ளுடன் வாழப் பழ­கிக்­கொள்­ளுங்கள்.

இப்­போ­தா­வது உங்­களின் சமூ­கத்தில் உள்ள குறைகள் குறித்து சுய பரி­சீ­லனை செய்­து­கொள்ள பழ­குங்கள். இப்­போது கவ­னிக்­கா­விட்டால் இன்னும் இன்னும் இந்த நாட்டில் தற்­கொ­லை­தா­ரி­களே உரு­வா­வார்கள். தற்­கொ­லை­தா­ரி­களை உரு­வாக்கும் நிலை­யங்­களே இந்த நாட்டில் உரு­வாகும் என்றார்.

அவர் கருத்­துக்­களை ஆவே­ச­மாக முன்­வைத்து உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த போது ஆளும் தரப்பில் இருந்த முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் கூச்­ச­லிட்டு முரண்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தனர். அரேபியக் கல்வி முறை குறித்து தமது கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.

இதற்குப் பதில் தெரிவித்த விமல் எம்.பி, நீங்கள் அனைவரும் இலங்கையர், அராபியர் அல்ல. முதலில் இந்த நாட்டினை நேசிக்கும் கொள்கைக்கு வாருங்கள். உங்களால் ஒருதாய் மக்களாய் இந்த நாட்டில் இருக்கமுடியும் என்றால் வாழுங்கள் இல்லையேல் நீங்கள் அனைவரும் எங்கிருந்து வந்தீர்களோ அந்த இடத்துக்கே போய்விடுங்கள். இந்த நாட்டினை நாசமாக்க வேண்டாம் என்றார்.

ரிஷாதுக்காக பாராளுமன்றில் இன்று முழங்கினார் ஹரீஸ்

ஏ.எச்.எம்.பூமுதீன் )

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வீன் குற்றச்சாட்டுக்களை எம்மால் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது !

ரிஷாட் – தற்கொலை குண்டுதாரி அல்ல !!

ரிஷாட் எனும் பாராளுமன்ற பிரதிநிதியை பயங்கரவாதியாக முத்திரை குத்த முனைவதை இச்சபையில் உள்ளோர் அநுமதிக்கமாட்டார்கள்!!!

பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்தவர்கள் சாய்ந்தமருது மக்களே !!!!

தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும், மு.கா. உறுப்­பினர்

ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர மாந­கர சபையின் ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஹாஜா மொஜிதீன் அல் உஸ்மான், அவ­ரது சகோ­தரர் உள்­ளிட்ட நால்­வரை தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க கொழும்பு மேல­திக நீதிவான் காஞ்­சனா நெரஞ்­சனா டி சில்வா நேற்று அனு­ம­தி­ய­ளித்தார்.

ஹாஜா மொ­ஹிதீன் அல் உஸ்மான், ஹாஜா மொஹிதீன் சுல்தான் பாரிஸ், மொஹம்மட் அல்லாத், மொஹம்மட் பெளசான் ஆகி­யோ­ரையே இவ்­வாறு தடுத்து வைக்க நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது. பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 72 மணி நேரம் சந்­தேக நபர்­களை விசா­ரணை செய்த பின்னர் பாது­காப்பு அமைச்­சி­ட­மி­ருந்து பெற்ற 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக நீதி­வா­னுக்கு வெலிக்­கடை பொலிசார் அறி­வித்­தனர்.

முஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன் – இளைஞர் அமைப்பாளர் முஸர்ரப்

அவிஸ்ஸாவல புவக்பிட்டியவில் சாரி அணிந்து கொண்டு வரும்படி முஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்திய சக ஆசிரியர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான சட்டத்தரணி முகம்மட் முஸர்ரப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முகத்தை முழுவதுமாக மறைக்கும் புர்கவைதான் தடை செய்துள்ளதேயன்றி ஸ்காப் அணிவதையோ, ஹபாயா அணிவதையோ தடை செய்யவில்லை. சிறுபான்மை சமூகத்தின் வலியை நன்கறிந்த சமூகத்திலிருந்து சக ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது வேதனை அளிக்கின்றது.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதிலிருந்து இலங்கையராகிய நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்து கொள்வதே இந்த தேசத்திற்கு ஆற்ற வேண்டிய மகத்தான பணியாக உள்ளது. மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் பயங்கரவாதத்தை துடைத்தெறியவே முஸ்லிம்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதன் காரணமாகத்தான் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.

தீவிரவாதிகள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே ராணுவத்துக்கு தகவல் வழங்குகின்றனர். ஒரு சில மிலேச்சத்தனமானவர்களால் ஏற்பட்ட கறையையும், பழியையும் போக்க முழு்மூச்சுடன் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இத்தகைய சூழலில் புவக்பிட்டிய பாடசாலையில் குறித்த ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல் ஆழ்ந்த கவலையையும் கூடவே எதிர்காலம் பற்றிய பயத்தையும் உருவாக்குகிறது.

90 களில் ஆங்காங்கே தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட சிறு சிறு அத்து மீறல்கள்தான் எமது நாட்டில் மீளமுடியாத வடுக்களையும் 3 தசாப்த கொடிய யுத்தத்தையும் இந்நாட்டில் தோற்றுவித்து. இதனால் எமது தேசம் அடைந்த பின்னடைவு கொஞ்ச நஞ்சமல்ல.

இனி ஒரு போதும் அத்தகைய பேரழிவு எமது தேசத்திற்கு ஏற்படக்கூடாது. மூவினமும் ஒன்று பட்டு தேசத்துரோகிகளை அழித்தொழித்துவிட்டு இந்நாட்டை மிண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நாம் இரு சமூகங்களுக்கிடையே சிராய்ப்புகள் ஏற்படாமல் பொறுப்புணர்வுடன் வாழப்பழகுவோம்.

அதிலும் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டியவர்கள். நமக்காக இல்லாவிடினும் அடுத்த தலைமுறையின் சுபீட்சத்திற்காகவேனும் பொறுப்புடன் நடந்து கொள்வோம்.

பிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை ; அமைச்சர் ஹரீஸ்.

முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு என ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

நேற்றைய நீர்கொழும்பு தாக்குதல் சம்பவங்களை அடுத்து முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நேற்றைய நீர்கொழும்பு சம்பவம் இலங்கை வாழ் முஸ்லிம்களை அச்சத்திற்குள்ளும் வேதனைக்குள்ளூம் தள்ளியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்பு பிரிவிற்கு தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் முஸ்லிம்களை அழுத்தத்திற்குள் தள்ளியுள்ளது.

பிரதமர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எந்த முழுமையான இழப்பீடுகளும் அரசினால் வழங்கப்படவில்லை. அம்பாறை பள்ளிவாயலுக்கு செய்யப்பட்ட முழுமையான மதிப்பீடு நிராகரிக்கப்பட்டது.

பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.அதனை ஒரு அரசியல் அறிவிப்பாகவே சமூகம் பார்க்கின்றது.

முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து வாழும் உரிமையை உறுதி செய்வதுமே அரசாங்கத்தின் பொறுப்பு.

இன்று அரச தரப்பில் இருக்கும் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களே முஸ்லிம்கள் தொடர்பில் விஷம பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். பங்கை தடை செய்ய வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் கூறுகிறார்.

உண்மைத்தன்மை அறியாமலேயே சிலர் ஷரியா பல்கலைகழகம் கட்டப்படுவதாக பிரசாரம் செய்கின்றனர்.ஓரிரு பள்ளிவாயல் வளாகங்களில் வால்கள் மீட்கப்பட்டதை ஒட்டுமொத்த பள்ளிவாயல்களில் ஆயுதம் மீட்கப்பட்டமை போன்று ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பாதுகாப்பு பிரிவினர் சில இடங்களில் வரம்பு மீறி செயற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் முஸ்லிம் சமூகம் பாரிய நெருக்கடிக்குள் விழுந்துள்ளது.

இதிலிருந்து முஸ்லிம்களை மீட்டு எடுப்பது எமது கடமை கட்சி பேதங்களை மறந்து எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.