இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பெற்ற 7 விக்கட்டுக்கள் வீடியோ காட்சி

Image title

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரும் டி20 அணியின் தவைருமான லசித் மாலிங்க சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய உள்ளுர் சம்பியன் தொடரில் பெற்ற 7 விக்கட்டுக்கள் வீடியோ காட்சி வாசகர்களின் பார்வைக்காக

பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த கிழக்கின் தங்க மகன் ரஜாஸ்கான்

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் பெரிதும் நம்பப்பட்ட நமது கிழக்கு மண்ணின் நம்பிக்கை நட்சத்திரம் ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கான் துரதிர்ஸ்டவசமாக நான்காவது இடத்திற்கு வந்ததுடன் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

போட்டியின் போது ரஜாஸ்கானிற்குக் கிடைத்த ஓடு பாதை சற்று சிரமம் என்பதுடன் அரம்பக் கட்டத்தைவிட இறுதி நேரத்தில் மிக சிறப்பான ஓட்டத்தை பெற்றிருந்தபோதும் 3 செக்கன் வித்தியாசத்தில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டார்.

ரஜாஸ்கானின் தோல்வி எமக்குக் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் அவரது பங்குபற்றுதல் நமது மண்ணிற்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகும். இதற்கு முதல் பல சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய ரஜாஸ்கான் பல தங்கப் பதக்கங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வரலாற்றில் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இலங்கையின் தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற வரலாற்றுச் சாதனையையும் நிகழ்த்தியவர்தான் கிழக்கின் தங்கமகன்  ரஜாஸ்கானாகும்.

இன்றை தோல்வி அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும் குறிப்பாக ஒலுவில் மண்ணிற்கும் சோகமாக இருந்தாலும் சாப் விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய நமது பிரதேசத்தின் முதல் மகனாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார் ரஜாஸ்கான்.

அவருக்கு எனதும் களம் பெஸ்ட் இணையத்தளத்தினதும் வாழ்த்துக்கள்

Image title

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஸ்தாபிக்கத் திட்டம்

Image title

விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்தியாவில் நடைபெறுகின்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் களம் பெஸ்ட்டிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இதனைக் கூறினார்.

அமைச்சர் தெரிவித்ததாவது,

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர்களில் அநேகமானவர்கள் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு தொழில் இல்லை. அவர்கள் அடையாளம் காணப்படவில்லை. இலங்கைக்குச் சென்றதும் அந்த அனைத்து வீர, வீராங்கனைகளுடனும் நான் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி, அவர்கள் வருமானத்தை ஈட்டுவதற்கு ஏதுவாக தனியார் துறையினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

மேற்கிந்தியத்தீவுகள் டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம்

Image title

சம்பள ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து மேற்கிந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக அதன் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. டரன் சமி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணியில் கிறிஸ் கெய்ல், பொலார்ட், டுவெய்ன் பிராவோ, சுனில் நரைன், சாமுவேல்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள், மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபைக்கு எதிராக திடீரென போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உலகக்கிண்ண போட்டிக்கு என்று மேற்கிந்திய கிரிக்கெட் சபை வீரர்களுக்கு தனியாக ஊதிய ஒப்பந்தம் செய்வது உண்டு. இந்த வகையில் தற்போதைய உலக கிண்ணத்திற்கு ஒப்பந்தத்தை ஏற்க மேற்கிந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக வீரர்கள் சார்பில் அணியின் தலைவர் டரன் சமி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தலைமை அதிகாரி முயர்ஹெட்டிற்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘மேற்கிந்திய தீவுகள் சார்பில் உலகக்கிண்ண போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறோம். அதே நேரத்தில் தற்போது வகுக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உலக கிண்ணத்தில், ஒவ்வொரு ஆட்டத்திற்கான கட்டணமாக வீரர்களுக்கு 21,000 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளீர்கள். இது ஏற்கத்தக்கது அல்ல. 2012 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்துடன் ஒப்பிடும் போது 50 முதல் 80 சதவீத ஊதியம் எங்களுக்கு குறைகிறது.

எனவே 21,000 அமெரிக்க டொலர்கள் என்பதை இரண்டு மடங்காக உயர்த்தி தர வேண்டும். போட்டியில் கிடைக்கும் பரிசுத்தொகை அனைத்தையும் முந்தைய உலகக்கிண்ணத்தை போன்றே வீரர்களுக்கே கொடுத்து விட வேண்டும். அதில் 20 சதவீதத்தினை பெறும் முடிவை கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஆனால் வீரர்களின் கோரிக்கையை ஏற்க மேற்கிந்திய கிரிக்கெட் சபை தயாராக இல்லை. வருகின்ற 14 ஆம் திகதிக்குள் ஒப்பந்தத்தை ஏற்று கையெழுத்திடாவிட்டால், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்வதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை என்று முயர்ஹெட் எச்சரித்துள்ளார்.

சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் நிலையில் மேற்கிந்திய கிரிக்கெட் சபை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏழு தங்கப்பதக்கங்களுடன் ஜூலியன் பொல்லிங்கின் சாதனையை முறியடித்தார் இலங்கை வீரர்

Image title

இலங்கையின் நீச்சல் வீரர் மெத்யூ அபேசிங்க, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1991 ஆம் ஆண்டு ஜூலியன் பொல்லிங் (Julian Bolling) நிலைநாட்டிய சாதனையை முறியடித்துள்ளார்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜூலியன் பொல்லிங் 5 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். இந்த சாதனையை தற்போது இலங்கையைச் சேர்ந்த வீரர் மெத்யூ அபேசிங்க 7 தங்கப் பதக்கங்களை வென்று முறியடித்துள்ளார்.

இன்றைய 400 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் போட்டிகளில் அவருக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

ஏற்கனவே அவர் 5 தங்கப்பதக்கங்களை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி- கல்முனை அஹ்னப் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பு

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கும், பாணந்துறை றோயல் கல்லூரிக்குமிடையிலான இரண்டு நாள் கிரிக்கட் போட்டியில் ஸாஹிராக் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.

பாணந்துரை நகர சபை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸாஹிராக் கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் இசான் சம்சுடீன் 66, முகம்மட் சாமாஸ் 46, முகம்மட் அஹ்னப் 36, அஸ்லான் சம்சுடீன் 39 ஆகியோர் ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் பாசித்த லக்ஸ்ஸான் மற்றும் அகில பிரமோதய இருவரும் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

பாணந்துறை றோயல் முதல் கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஆர்.ரவிசங்க 64, நிலான் பெர்ணாண்டோ 68 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் முகம்மட் நஜாத், இசான் சம்சுடீன்,சஜீத் சமிர ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினர்.

ஸாஹிராக் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் முகம்மட் அஹ்னப் 54, அஸ்லான் சம்சுடீன் 54, திலங்க ரூபசிங்க 24 என ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீ்ச்சில் பாசித்த ரக்ஸ்ஸான் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பாணந்துறை ரோயல் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஆர் . ரவிசங்க 42, பத்தும் நிமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முகம்மட் நஜாத் 3 விக்கட்டுக்கனை கைப்பற்றினார்.

இதன்படி போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்ததுடன் முதல் இன்னிங்ஸ் வெற்றி கொழும்பு ஸாஹிராக் கல்லூரி பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியுடன் ஸாஹிராக் கல்லூரி இரண்டாவது சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக விளையாடும் முகம்மட் அஹ்னப் கல்முனையைச் சேந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் இடம்பெறும் டி20 உலகக் கிண்ணத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தான்?

Image title

பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என தெரியவந்துள்ளது.

ஆறாவது இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடைபெறுகிறது. மார்ச் 19 தர்மசாலா நகரில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து விளையாடுவதில் தயக்கம் காட்டி வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் சஹாரியார் கான் கூறுகையில், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று விளையாடுவது குறித்து பாகிஸ்தான் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை அரசு அனுமதி மறுக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது.

பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளை வேறு நடுநிலையான இடத்தில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் சங்கத்திடம் கோரிக்கை வைக்கப்படும். இலங்கை அல்லது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள மைதானங்களில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி தயாராகவே உள்ளது என்றார்.

பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதில் சில குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் உள்ளன. எனவேதான், நாங்கள் இதுதொடர்பாக அரசை அணுகி உள்ளோம். இந்த அச்சுறுத்துல்கள் பொதுவானது அல்ல என்றார் கான்.

பொதுவான அச்சுறுத்தல் காரணமாக பங்களாதேஷில் நடைபெற்று வரும் 19 வயதுக்குபட்டோருக்கான உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி புறக்கணித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை சிவசேனையின் போராட்டத்தைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் பணியாற்றவிருந்த பாகிஸ்தான் நடுவர் அலிம் தாரை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திரும்ப பெற்றது.

மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் வாசிம் அக்ரம் மற்றும் ஷோயிப் அக்தர் ஆகியோரும் முன்னதாகவே நாடு திரும்பினர்.

கிமிக்கோ ரஹீமுக்கு 4 ஆவது தங்கப்பதக்கம் : ஜீவனுக்கு 2 ஆவது தங்கம்; 800 மீற்றர் ஓட்டத்தில் நிமாலிக்கு தங்கம்

Image title

(குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து எஸ்.ஜே.பிரசாத்)

12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீராங்கனை கிமிக்கோ ரஹீம் 4 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார். மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளிலும் இலங்கை அணி தனது தங்­க­வேட்­டையை ஆரம்­பித்­தது.

மக­ளி­ருக்­கான 800 மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் இலங்­கை யின் நிமாலி தங்கப் பதக்­கத்­தையும் கயன்­திகா வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் வென்­றனர்.

இந்­தி­யாவின் அசாம் மாநி­லத்தின் குவா­ஹாட்டி மற்றும் மேகாலயா மாநிலத்தின் ஷில்­லோங்கில் நடை­பெறும் 12 ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களின் ஐந்தாம் நாளான நேற்று தட­களப் போட்­டிகள் ஆரம்­ப­மா­கின.

பெண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இலங்கை வீராங்­கனை ஏ.நிமாலி லிய­னா­ரச்சி முத­லிடம் பெற்று, இலங்­கைக்கு மெய்­வல்­லுனர் போட்­டி­களில் முத­லா­வது தங்­கத்தைப் வென்று கொடுத்தார்.

இவர் இப்­போட்­டியை 2.09 நிமி­டங்­களில் நிறை­வு­செய்தார். மகளிர் 800 மீற்றர் ஓட்­டப்­போட்­டியின் வெள்­ளிப்­ப­தக்­கமும் இலங்­கைக்கே கிடைத்­தது. அப் பதக்­கத்தை கயன்­திகா அபே­ரத்ன பெற்­றுக்­கொ­டுத்தார்.

இதே­வேளை ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் குறுந்­தூர ஓட்­டப்­போட்­டியின் 2 ஆவது தகு­திகாண் சுற்றில் பங்­கு­பற்­றிய ஹிமாச ஹேஷான், கடந்த 1999ஆம் ஆண்டு காத்­மண்­டுவில் நடை­பெற்ற தெற்­கா­சிய விழாவில் இந்­திய வீரர் அனில் குமாரால் (10.37 செக்­கன்கள்) நிகழ்த்­தப்பட்ட சாத­னையை முறி­ய­டித்தார்.

இவர் குறித்த தூரத்தை 10.26 செக்­கன்­களில் கடந்தார். இதே­வேளை, பெண்­க­ளுக்­கான குண்டு எறி­தலில் டீ.கே பெர்­ணாண்டோ 14.87 மீற்றர் தூரம் வீசி வெண்­க­லப்­ப­தக்­கத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

சைக்­கி­ளோட்டம்

போட்­டி­களின் 5 ஆவது நாளான நேற்று இலங்­கைக்கு முத­லா­வது தங்கப் பதக்­கத்தை சைக்­கி­ளோட்ட வீரர் ஜவீன் மஞ்­சுள பெற்­றுக்­கொ­டுத்தார்.

ஆண்­க­ளுக்­கான 100 கிலோ­மீற்றர் தனி­நபர் சைக்­கி­ளோட்டப் போட்­டியில் ஜீவன் மஞ்­சுள ஜய­சிங்க வென்றார். இவர் போட்­டித்­தூ­ரத்தை 2 மணித்­தி­யா­லயம் 25 நிமிடம், 38 விநா­டி­களில் கடந்தார்.

இம்­முறை ஜீவன் மஞ்சுள வென்ற இரண்­டா­வது தங்­கப்­ப­தக்கம் இது­வாகும். இதற்­குமுன் ஆண்­க­ளுக்­கான 60 கிலோ­மீற்றர் ஸ்பிரிங் பிரிவில் மஞ்­சுள தங்­கப்­ப­தக்கம் வென்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பெண்­க­ளுக்­கான 80 கிலோ­மீற்றர் வீதி­யோர தனி­நபர் சைக்­கி­ளோட்டப் போட்­டியில் இலங்கை சார்­பாக 6 வீராங்­க­னைகள் கலந்­து­கொண்டர்.

எனினும் எந்­த­வொரு பதக்­கத்தை இலங்கை பெற்­றுக்­கொள்­ள­வில்லை. முதல் மூன்று இடங்­க­ளையும் இந்­தி­யாவே பெற்­றது.

கடந்த 5 ஆம் திகதி முதல் நடை­பெற்­று­வந்த சைக்­கி­ளோட்டப் போட்­டிகள் நேற்­றுடன் நிறை­வுக்கு வந்­தன.

இதன்­படி, இலங்கை அணி 2 தங்­கங்­க­ளையும், ஒரு வெள்­ளிப்­ப­தக்கம் உட்­பட 2 வெண்­க­லப்­ப­தக்­கங்­களைப் பெற்­றுக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

கிமிக்கோ ரஹீ­முக்கு 4 ஆவது தங்கம்

நேற்று மாலை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 50 மீற்றர் மல்­லாக்கு நீச்சல் (பெக் ஸ்ட்ரோக்) போட்­டியில் இலங்கை வீராங்­கனை கிமிகோ ரஹீம் மற்­று­மொரு தங்கப் வென்றார்.

இம்­முறை கிமிக்கோ ரஹீம் வென்ற 4 ஆவது தங்­கப்­ப­தக்கம் இது­வாகும். ஆண்­க­ளுக்­கான 400 மீற்­றர் சாதா­ரண (ப்றீ ஸ்டைல் நீச்சல் போட்­டியில் இலங்­கையின் கைல் அபே­சிங்க வெண்­க­லப்­ப­தக்­க­தையும், ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் வண்­ணத்­துப்பூச்சி (பட்­டர்ஃ­பிளை) போட்­டியில் சிரந்த டி சில்வா வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் வென்­றனர்.

பளு­தூக்கல்

நேற்று காலை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான பளு­தூக்­கலில் 75 கிலோ­கிராம் எடைப்­பி­ரிவில் இஷானி அனுஷ்கா வெள்ளிப்பதக்கதை வென்றார்.

அத்துடன் ஆண்களுக்கான 105 கி.கி எடைப்பிரிவில், அபேவிக்ரம வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தார்.

இதன்படி, கடந்த 6 ஆம் திகதி முதல் நடைபெற்றுவந்த பளுதூக்கல் போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்ததுடன், இதில் இலங்கை அணி ஒரே ஒரு தங்கப்பதக்கத்தை மட்டுமே பெற்றுக்கொண்டது.

Image title

முதலாவது இருபது 20 போட்டியில் இந்தியாவை வென்றது இலங்கை

Image title

புனே நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 101 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதையடுத்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளத் திணறினர். 101 ஓட்டங்களுடன் அவ்வணி சகல விக்கெட்களையும் இழந்தது. அஸ்வின் (ஆட்டமிழக்காமல் 31) ரெய்னா (20), யுவராஜ் சிங் (10) ஆகியோர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைப் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தசுன் ஷானக்க 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மந்த சமீர 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கைளயும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Image title

கட்டார் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதி

Image title

(சஜா. எம். அனைஸ்)

கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் மாலை வரை பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் மைதர் விளையாட்டுமைதானத்தில் கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் நிர்வாகத்தின் நெறிப்படுத்தலில் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் தேசிய கொள்கைபரப்பு செயலாளருமான மாகாணசபை உறுப்பினர் அல் -ஹாஜ் MSS . சுபைர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீற்றிய வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இங்கு மாகாணசபை உறுப்பினர் அல் -ஹாஜ் MSS . சுபைர் அவர்கள் வெளிநாட்டில் நமது மக்களின் நிலைகளை பற்றியும் நாட்டின் தற்போதைய முஸ்லிம் தலைமைகளின் போக்கினை பற்றியும் சிறப்பாக விளக்கவுரை ஒன்றினை நிகழ்த்தினார் . இந்நிகழ்வில் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Image title

Image title

Image title

Image title

தெற்காசிய விளையாட்டுப் போட்டியை தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்ய விளையாட்டு அமைச்சு நடவடிக்கை எடுக்குமா?

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை இலங்கை ரசிகர்கள் கண்டு களிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வந்த போதிலும் இம்முறை இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் மாத்திரம் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை.

கடந்த காலங்களில் இருந்த அமைச்சர்களை விட இம்முறை ஆளுமையுள்ள விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதியமைச்சரும் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் மிகப்பெரிய பலத்தை நிருபிக்கின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியை ரசிகர்கள் கண்டு களிக்க முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு உட்பட்டுள்ளனர்.

கிரிக்கட் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற போட்டிகளாகும். ஆனால் மெய்வல்லுநர் போட்டிகள் என்பது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை,இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற போட்டிகளாகும். இவ்வாறு நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு இடம்பெறுகின்ற போட்டிகளை கட்டாயம் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி இன்றுடன் ஐந்து நாட்களாகின்றது. இலங்கையின் சார்பாக திறமை காட்டியவர்கள் யார் என்பதைக்கூட அறிய முடியாத நிலைக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சர்கூட போட்டிகள் நடைபெறும் இடத்தில் இருக்கின்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இலங்கை ரசிகர்கள் பலமான வேண்டுகோளை முன்வைக்கின்றனர். இன்றிலிருந்தாவது மீதமிருக்கின்ற போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுங்கள். நல்லாட்சியில் இவ்வாறு இடம்பெறுவது கவலைக்குரிய விடயமாகும்.

ஒருநாள் போட்டிகளிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் மக்கலம்

Image title

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 159 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2 ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 246 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

247 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலிய அணி 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் 55 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரோடு ஓய்வு பெற போவதாக நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலம் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் அவர் விளையாடிய கடைசி ஒரு நாள் போட்டியாக இன்று இருந்தது.

தனது கடைசி ஒரு நாள் போட்டியில் மக்கலம் 47 ஓட்டங்களைக் குவித்தார். 27 பந்துகளை சந்தித்து 6 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்களுடன் இந்த ஓட்டப் பெறுதியை மக்கலம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கலம் 260 ஒரு நாள் போட்டியில் விளையாடி 6083 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 5 சதமும் அடங்கும். அதிகபட்சமாக 166 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு மக்கலம் சர்வதேச போட்டியில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார்.

மேலும் அவுஸ்திரேலியாவுடனான தொடரை 2-1 ரீதியில் நியூசிலாந்து கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களின் பின்னர் கால்­பந்­தாட்­டத்தில் இந்­தி­யாவை வீழ்த்­தி­யது இலங்கை

Image title

கால்­பந்­தாட்­டத்தில் இந்­தி­யாவை வீழ்த்­தி­யது இலங்கை

தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான குழு ஏ கால்­பந்­தாட்டப் போட்­டியில் (ஆண்கள்) இந்­தி­யாவை 1 – 0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் இலங்கை வெற்­றி­கொண்­டது.

சாரு­சாஜாய், இந்­திரா காந்தி விளை­யாட்­ட­ரங்கில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற இப் போட்­டியின் 16ஆவது நிமிடத்தில் இலங்கை அணித் தலைவர் எம். சி. எம். ரிவ்னாஸ் ப்றீ கிக் மூலம் அலாதியான கோல் போட்டு பலம்வாய்ந்த இந்திய அணியை பிரமிக்க வைத்தார்.

கால்பந்தாட்டத்தில் இந்தியாவை இலங்கை வெற்றிகொண்டது கடந்த பத்து வருடங்களில் இதுவே முதல் தடவையாகும்.

இலங்கைக்கு நீச்சல், சைக்கிளோட்டம், வூஷுவில் தங்கங்கள் நீச்சல் வீரர் மெத்யூவின் வெற்றி அலை தொடர்கின்றது

Image title

(குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து

எஸ். ஜே. பிரசாத்)

இந்­தி­யாவின் அஸாம் மாநி­லத்தில் நடை­பெற்­று­வரும் 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை தனது தங்கப் பதக்க எண்­ணிக்­கையை எட்­டாக அதி­க­ரித்­துக ்­கொண்­டுள்­ளது.

எனினும் வர­வேற்பு நாடான இந்­தி­யாவின் பதக்க வேட்டை தொடர்ந்த வண்ணம் இருக்­கின்­றது.

போட்­டியின் இரண்டாம் நாளான (விழாவின் மூன்றாம் நாள்) நேற்­றைய தினம் இலங்­கையின் சாதனை நீச்சல் வீரர் மெத்யூ அபே­சிங்க, தனது தங்கப் பதக்க எண்­ணிக்­கையை 4 ஆக உயர்த்­திக்­கொண்டார்.

ஸக்கிர் ஹுசெய்ன் நீச்சல் தடா­கத்தில் நேற்று நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 50 மீற்றர் சாதா­ரண (ப்றீ ஸ்டைல்) நீச்சல் போட்­டியை 23.33 செக்­கன்­களில் நிறைவு செய்து தனது தனிப்­பட்ட தங்கப் பதக்க எண்­ணிக்­கையை நான்­காக உயர்த்­திக்­கொண்டார்.

தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இம் முறை 11 நீச்சல் தங்கப் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்­துள்­ள­தாக மெத்யூ தெரி­விக்­கின்றார்.

இதே­வேளை பெண்­க­ளுக்­கான 200 மீற்றர் மல்­லாக்கு நீச்­சலை 2 நிமி­டங்கள் 18.09 செக்­கன்­களில் நிறைவு செய்த இலங்­கையின் கிமிக்கோ ரஹிம் தனது முத­லா­வது தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார்.

ஆண்­க­ளுக்­கான 60 கிலோ மீற்றர் தேர்வு (க்ரைட்­டே­ரியம்) சைக்­கி­ளோட்டப் போட்­டியில் இலங்­கையின் ஜீவன் ஜய­சிங்க 34 புள்­ளி­களைப் பெற்று தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

இதே­போட்­டியில் இலங்­கையைச் சேர்ந்த மற்­றொரு வீரர் நவீன் ரூச்­சிர 24 புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்­கத்தை வென்றார்.

பெண்­க­ளுக்­கான 40 கிலோ மீற்றர் தேர்வு சைக்­கி­ளோட்டப் போட்­டியில் சுதா­ரிக்கா பிரி­ய­தர்­ஷனி 9 புள்­ளி­க­ளுடன் வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

இது இவ்­வா­றி­ருக்க, வூஷு போட்­டியில் சங்வான் நிகழ்ச்­சியில் இலங்­கையின் பீ. எல். எச். லக் ஷான் 8.86 புள்­ளி­க­ளுடன் தங்கப் பதக்­கத்­திற்கு சொந்­தக்­கா­ர­ரானார்.

மெத்யூ அபே­சிங்க நீச்­சலில் சாதனை

போட்­டியின் முதல் நாளான சனிக்­கி­ழ­மை­யன்று நீச்சல் வீரர் மெத்யூ அபே­சிங்க இரண்டு தெற்­கா­சிய சாத­னை­க­ளுடன் 3 தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுத்தார். அத்­துடன் பளு­தூக்கல் போட்­டியில் இலங்கை அணியின் உதவித் தலைவர் சுதேஷ் பீரிஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் சாதா­ரண நீச்சல் போட்­டியை ஒரு நிமிடம் 52.28 செக்­கன்­க­ளிலும் 100 மீற்றர் வண்­ணத்­துப்­பூச்சி வகை­யி­லான நீச்­சலை 55.42 செக்­கன்­க­ளிலும் நிறைவு செய்து தெற்­கா­சிய விளை­யாட்டு விழா நீச்­ச­லுக்­கான இரண்டு புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினார்.

அத்­துடன் தனது சகோ­தரர் கய்ல் அபே­சிங்க, செரன்த டி சில்வா, ஷெஹான் டி சில்வா ஆகி­யோ­ருடன் இணைந்து 4 தர 100 மீற்றர் சாதா­ரண தொடர் நீச்சல் போட்­டியில் பங்­கு­பற்றி அதிலும் இலங்­கைக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார்.

இப் போட்டித் தூரத்தை இலங்கை நீச்சல் அணி­யினர் 3 நிமி­டங்கள், 30.11 செக்­கன்­களில் நிறைவு செய்­தனர்.

இதே­வேளை, போகேஸ்­வரி புக்­கா­னானி உள்­ளக அரங்கில் நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 62 கிலோ­கிராம் எடைப்­பி­ரி­வுக்­கான பளு­தூக்கல் போட்­டியில் மொத்­த­மாக 265 கிலோ கிராம் (ஸ்னெச் 115 கி.கி., ஜேர்க் 150 கி.கி.) எடையைத் தூக்கி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

Image title

Image title

தெற்காசிய விளையாட்டு விழாவின் நான்காம் நாள் இன்று

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 4ஆம் நாள் இன்று இடம்பெறவுள்ளது.

தெற்காசிய விளையாட்டு விழா இந்தியா குவாட்டியில் நடைபெற்று வருகின்றது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இலங்கை 8 தங்கப்பதக்கங்களையும்,14 வௌ்ளிப் பதக்கங்களையும்,18 வெண்கலப் பதக்கங்களையும் சுவீரித்து பதக்கப்பட்டியில் இரண்டாம் நிலையிலுள்ளது.

இம்முறை போட்டிகளில் வீரா்களின் திறமைகளை உற்சாகப்படுத்துவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, மெய்வல்லுநர் அணியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீரா்கள் இடம்பெறுகின்றனர். அட்டாளைச்சேனை- ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜாஸ்கான் மற்றும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்ரப் ஆகியோர்களாகும்.