நாசா மறைத்த உண்மை: வெளியாகியது ஏலியன் தொடர்பான படங்கள்

Image title

பல ஆண்டுகளாகவே செவ்வாய் கிரகத்தை குறித்து கடுமையாக ஆரய்ந்து வருகிறது அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா. இத்தனை கோள்கள் எம்மை சுற்றி இருக்க குறிப்பாக செவ்வாய் கிரகத்தை மட்டும் நாசா ஏன் ஆராயவேண்டும் என்று பல விஞ்ஞானிகள் முன்னரும் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால் அங்கே ஏதோ இருக்கிறது என்பதனை அமெரிக்கா உணர்ந்துள்ளதாகவும். அதன் காரணமாகவே ,அவர்கள் அக்கிரகத்தை தொடர்ந்தும் ஆராட்சி செய்து வருவதாக பலர் கூறுகிறார்கள். இவ்வாறு வரும் புரளிகளில் சில உண்மை என்பது ஒரு புறம் இருக்க , இதனை நிரூபிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனை ஏன் நீங்கள் முன்னர் வெளியிட வில்லை என்று கேட்டால், இது பிரம்மை என்கிறார்கள் நாசாவில் உள்ளவர்கள்.

குறித்த இந்த படத்தை எடுத்தது அமெரிக்காவால் அனுப்பப்பட்ட “கியூரியாசிட்டி” ரோவர் கார் தான். அது செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஊர்ந்து சென்று பல இடங்களை படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. பல புகைப்படங்களை வெளியிட்ட நாசா இதனை மட்டும் மறைத்துவிட்டார்கள். ஆனால் அங்கே வேலைசெய்யும் ஒரு நபரால் , இந்த புகைப்படம் பேஸ் புக் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இப்புகைப்படம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு நாசா தற்போது தள்ளப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள். இது ஒரு பிரம்மை என்று கூறுகிறார்கள்.

இங்கே காணப்படும் நண்டு போன்ற உயிரினம் ஒன்று , மலையில் ஏறுவது போல படத்தில் உள்ளது. ஆனால் அது கல் என்கிறார்கள் நாசாவில் உள்ளவர்கள். நாம் அதனை ராட்சச நண்டு என்று நினைத்துப் பார்த்தால் அது அப்படி தான் எமக்கு தெரியும் என்று கூறுகிறார்கள் அவர்கள்.

அப்படி என்றால் ஏன் புகைப்படத்தை முதலில் மறைத்தீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நோ காமன்ஸ் என்று பதில் கூறிவிட்டார்கள். இது ஒரு கூட்டுச் சதி என்று , பலர் குற்றஞ்சாட்டி உள்ளார்கள். அமெரிக்கா தற்போது அண்டவெளியில் உள்ள உயிரினங்களைத் தேடி அலைகிறது.

அவர்கள் எம்மை விட புத்திசாலிகளாக இருந்தால், அவர்களது டெக்னாலஜியை கண்டு பிடிப்பது. மேலும் வேற்று கிரக வாசிகளின் உடலை ஆராய்ந்து அவர்களது ரத்த மாதிரியை எடுத்து உலகில் உள்ள தீராத நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்து அதனூடாக கோடி கோடியாக சம்பாதிக்க முடியுமா ? இல்லை வேற்று கிரக வாசிகளிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை மேலும் அவர்களுக்கு உள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியுமா என்று தான் இவர்கள் ஆராட்சி தொடர்கிறது என்கிறார்கள்.Image title

எது எப்படி இருந்தாலும் அமெரிக்கா பல உண்மைகளை உலகிற்கு மறைத்து வருகிறது என்பது மட்டும் தற்போது நிரூபனமாகியுள்ளது. உண்மையில் படத்தில் இருப்பது போன்ற ராட்சச உயிரினம் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறது என்றால், இது தொடர்பான ஆராட்சிகளை மேற்கொள்வது நல்லது.

ஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடித்து விண்வெளியில் புதிய சாதனை படைத்த விஞ்ஞானிகள்

Image title

ஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடித்து விண்வெளியில் புதிய சாதனை படைத்த விஞ்ஞானிகள்

விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் அல்லது நட்சத்திரங்கள் இணைவதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் உருவாவதை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன் அல்பர்ட் அயின்ஸ்டீன் வகுத்த சார்பியல் கொள்கை உண்மை என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

1915 ஆம் ஆண்டு ஈர்ப்பு விசை குறித்த சார்பியல் தத்துவத்தை இயற்பியல் விஞ்ஞானி அயின்ஸ்டீன் வகுத்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்திய விஞ்ஞானிகள் காலவெளியில் இருக்கும் ஈர்ப்பு விசை குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

நேற்று இது குறித்து வொஷிங்டன் தேசிய பத்திரிகையாளர் சந்திப்பில் விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

அதில், விண்வெளி பாதையில் உள்ள இரண்டு கரும்புள்ளிகள் இணைவதன் மூலம் ஈர்ப்பு அலைகள் அல்லது சிற்றலைகள் தோன்றுகின்றன, இவைகள் அரை ஒளிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன என கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பூமியில் இருந்து 1.5 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இந்த ஈர்ப்பு விசை இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் அண்டம் தோன்றிய விதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், பிரபஞ்சத்தின் தோற்றத்தில் மறைந்துள்ள பல மர்மங்களை கண்டறியவும் இது துணைபுரிகின்றது என கூறப்படுகிறது.

இதே போல் செயற்கைகோள் ஆய்வுகளின் போது புவியில் இருந்து ஏற்படும் ஒலி போன்ற இடையூறுகளை கடந்து ஆய்வுகளை எளிதில் மேற்கொள்வதற்கும் இந்த ஈர்ப்பு அலைகள் பயன்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகளின் இந்த அறிய கண்டுபிடிப்புக்கு ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்று இன்னும் பல கண்டுபிடிப்புக்கள் நடத்தப்பட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வ‌ட்ஸ் அப் குருப்பில் இனி 256 பேர் உறுப்பினராகலாம்!

Image title

வ‌ட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வ‌ட்ஸ் அப் பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஒன்லைனில் இணைந்திருக்க வ‌ட்ஸ் அப் குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் வ‌ட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் ஆண்டு சந்தா விதிக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை இனி இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வ‌ட்ஸ் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒரு வ‌ட்ஸ் அப் குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தியது வ‌ட்ஸ் அப்.

தற்போது, அந்த எண்ணிக்கை 256-ஆக உயர்த்தியுள்ளது வ‌ட்ஸ் அப். ஆனால், இந்த புதிய வசதி சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது. ஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. விண்டோஸ், பிளாக்பெர்ரி உள்ளிட்ட செல்பேசிகளுக்கு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றுப் பைகளில் கோளாறு: உலகம் முழுவதும் 50 இலட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன

Image title

வாகனங்களில் பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்ட காற்றுப் பைகளில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக உலகம் முழுவதும் 50 இலட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன.

கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தயாரித்து, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகித்த காற்றுப் பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் தயாரித்து விநியோகித்த காற்றுப்பை கட்டுப்பாட்டு கணனியில் ஈரப்பதம் உட்புக வாய்ப்பிருப்பதாலும் இதன் காரணமாக காற்றுப்பை விரியாமல் ஓட்டுநருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாலும், அவை பொருத்தப்பட்டுள்ள கார்களை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அளித்த ஆவணங்கள், தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதே பிரச்சினைக்காக, ஹோண்டா, ஃபியட் கிரைஸ்லர், வோக்ஸ்வேகன் மற்றும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 20 இலட்சம் வாகனங்கள் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கான்டினென்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பில் 220 முறைப்பாடுகள் பதிவு

Image title

கடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பிலான 220 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றுள் போலிக் கணக்குகள் தொடர்பாகவே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

சமூக இணையத்தளங்களில் தங்களின் பெயர்களில் வேறு நபர்கள் போலிக் கணக்குகளை உருவாக்கியுள்ளமை குறித்து முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனையோர் தங்களின் பெயர் மற்றும் நிழற்படங்களை பயன்படுத்தி போலிக் கணக்குகளை உருவாக்குவதற்கு ஏதுவாக சமூக இணையத்தளங்களில் அறிமுகமில்லாதவர்களுக்கு உண்மையான விபரங்களை வழங்காதிருப்பது உகந்ததென கணனி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் தெரிவித்தார்.

அத்துடன் தங்களின் பெயர் விபரங்களுடன் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதுகுறித்து அந்தந்த சமூக இணையத்தளங்களில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட்ஸப்பும், கூகுளும் செய்யும் சூறையாடல்கள் அம்பலம்..!!

Image title

வாட்ஸ் அப்பில் ஏன் விளம்பரங்களே இல்லை? என்ற கேள்விக்கு இந்நிறுவனம் கூறும் பதில், “தினமும் காலையில் நம்முடைய மொபைலை பார்க்கும் போது இன்று நம் மொபைலில் என்ன விளம்பரத்தை பார்க்கப்போகிறோம் என்று எதிர்பார்ப்பதில்லை.

அதேபோல தினமும் தூங்கப் போகும் முன்பும் அன்று நாம் மொபைலில் கண்ட விளம்பரத்தை நினைத்து சிரமப்பட போவதுமில்லை. எங்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று தான். பெரும்பாலும் தூங்கப்போகும் முன் பலரது மனத்திரையிலும் அன்றைய நாளில் சாட் செய்தவர்களின் சாட் பக்கங்களே பிரதிபலித்துக் கொண்டிருக்கும். இதனை நாங்கள் நன்கு அறிவோம். எனவே தான் எங்கள் சாட் சேவையில் நாங்கள் விளம்பரங்களை விற்பதில்லை”

இவ்வாறு வாட்ஸ் அப் மட்டுமல்ல. இதனைப்போன்று பல்வேறு ஆப்கள் இலவசமாக சந்தையில் இறங்கி இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் விளம்பரங்களின் மூலம் லாபம் பார்த்துவிடுகின்றன. பொதுவாக ஆப்களுக்கான லாபம் வருவது இரண்டு வகைகளில்.

1) இன்ஸ்டால் செய்யப்படும்போதே ஆப்பிற்கு விலை நிர்ணயித்தல். சில ஆப்களை முதலில் இலவச ட்ரையல் பேக்காக பயன்படுத்தி சில காலங்களுக்கு பிறகு விலை கொடுக்க வேண்டியதாய் இருக்கும். மேலும் சில ஆப்களில் அடிப்படை வசதிகள் மட்டும் இலவசமாக கிடைக்கும். கூடுதல் அம்சங்களுக்கு மட்டும் பணம் செலுத்த வேண்டும்.

2) ஸ்க்ரீனிலேயே ஒரு மூலையில் பிரதிபலிக்கப்படும் விளம்பரங்கள். இவற்றின் மூலம் கிடைக்கும் லாபத்தில் இந்த ஆப்களின் கஜானாவிற்கும் சில பரிமாற்றங்கள் நிகழ்வதால் பல இலவச ஆப்கள் இத்தகைய விளம்பரங்களை ஊக்குவிக்கின்றன. கூகுளும், பேஸ்புக்குமே கூட இதற்கு உதாரணங்கள் தான்.

ஆனால், தினமும் 90 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் ஒரு விளம்பரம் கூட எட்டிப்பார்க்க அனுமதி இல்லை. இன்ஸ்டால் செய்வதும் இப்பொழுது முற்றிலும் இலவசமாகி விட்டது. பின்னர் எப்படி லாபம் ஈட்டுகிறது வாட்ஸ் அப்? மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளிலும் லாபம் ஈட்டுவது சாமானியனின் யுக்தி. ஆனால் இன்டர்நெட் ஜாம்பவான்களான கூகுளும் சரி, வாட்ஸ் அப்பும் சரி லாபம் ஈட்டுவதற்கு கையாளும் முறை விசித்திரமானது, நம்மில் எவரும் எதிர்பாராதது.

வாட்ஸ்அப் போலவே கூகுளும் தனது பெரும்பாலான சேவைகளை இலவசமாகவே வைத்துள்ளது. இதற்கு காரணம் இவ்விரு கம்பெனிகளும் கையாளும் அந்த பிசினஸ் மாடல். உலகில் வேறு எந்த நிறுவனத்தாலும் பயன்படுத்த முடியாத பிசினஸ் மாடல் அது.

இதற்கு அடிப்படையாக இருப்பது மிக பிரம்மாண்டமான ஒரு விஷயம். ஆங்கிலத்தில் இதனை பிக் டேட்டா (BIG DATA) என்பர். அதாவது நாம் ஒவ்வொரு நாளும் இணையத்தில் பயன்படுத்தும் எண்ணற்ற தகவல்களின் தொகுப்பு. உதாரணமாக நீங்கள் கூகுளில் ஒவ்வொரு நாளும் தேடும் தகவல்கள் கூகுளால் கண்காணிக்க பட்டுக்கொண்டே இருக்கும். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு தேடலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு உங்களைப் பற்றிய ஒரு டேட்டாபேஸையே உருவாக்கிக்கொள்ளும். மேலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் அன்றாட தேவைகளையும் அவர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தையும் அறிந்து அவற்றைப் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படும்.

நீங்கள் தினந்தோறும் செய்யும் எண்ணிலடங்கா சாட்கள் அனைத்தும் வாட்ஸ்அப்பில் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு தான் எதிர்முனைக்கு செல்கிறது என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. கூகுளிலும் இதே நிலைமை தான். கூகுள் சர்ச் இன்ஜினில் நீங்கள் தேடுவதும் சரி, ஜிமெயிலில் பரிமாற்றப்படும் மெயிலும் சரி கூகுளால் ஸ்கேன் செய்யப்பட்டு தான் அனுப்பப்படுகின்றன. அங்கு நம் ஒவ்வொருவரைப் பற்றியும் பெரிய ஆராய்ச்சியே நடந்து கொண்டிருக்கிறது தினமும்.

இவ்வாறு ஒட்டுமொத்த மனிதகுலத்தின் தகவல் பரிமாற்றங்களும் இந்த இரு நிறுவனங்களின் மூலம் நடைபெறுவதால் இவ்வளவு பெரிய மெகா சைஸ் டேட்டாபேஸை உருவாக்குவது இந்த இரு நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம்.

இது எது வரை என்றால் நீங்கள் யூடியூபில் காணும் படங்களை அலசி ஆராய்ந்து கொண்டு அடுத்த முறை நீங்கள் யூடியூபினுள் நுழைந்தவுடன் உங்களின் ரசனைக்கேற்ற திரைப்படங்களின் பட்டியல் உங்கள் முன் தோன்றுமே. அதுபோல் ஃபேஸ்புக் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனைந்திருக்கிறது. வாட்ஸ் அப்பில் நீங்கள் அடிக்கடி உங்கள் நண்பருடன் பிரிட்னி ஸ்பியர்ஸ் பற்றி பேசிவிட்டு உங்களது பேஸ்புக் அக்கவுண்ட்டிற்குள் லாக் இன் செய்தால் பிரிட்னி ஸ்பியர்ஸின் “ஜாய் ஆப் பெப்சி“ விளம்பரத்தையோ, அவரின் லேட்டஸ்ட் ஆல்பம் அடங்கிய குறைந்த விலை டிவிடிக்களின் விளம்பரத்தையோ காணலாம்.

உலகின் மூலை முடுக்கில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் இரண்டு செயலிகள் கூகுளும், வாட்ஸ் அப்பும். ஆக கிட்டத்தட்ட இந்த பூமியின் பெரும்பான்மை மக்களின் டேட்டாபேஸும் இப்பொழுது இந்த இரு நிறுவனங்களின் கையில் உள்ளது. இதனால் என்ன பெரிய லாபம் கிடைத்துவிடப்போகிறது என நீங்கள் எண்ணலாம். ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உலகின் மிகப்பெரிய கம்பெனிக்களின் மிகப்பெரிய இலக்கு ஒன்றே ஒன்று தான். அது வாடிக்கையாளர்களான மக்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதுதான். இந்த பெரும் செயலை செய்து தரும் திருப்பணியை கூகுளும் வாட்ஸ் அப்பும் கவனித்து கொள்ள இப்பொழுது அந்த உலகளாவிய கம்பெனிகளின் ஆணி வேர் இந்த இரு நிறுவனங்களின் கையில்.

இப்பொழுது யோசித்து பாருங்கள், நம்மை பற்றிய டேட்டாபேஸிற்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கும் இந்த கம்பெனிகள். உண்மையில் இதற்கான விலை பில்லியன் டாலர்களை தொட்டு பல வருடங்கள் ஆகிற்று. இவ்வாறு நம்மைப் பற்றிய அந்தரங்கங்கள் அனைத்திற்கும் உற்பத்தித்தலமாக வாட்ஸ் அப் என்ற ஒன்று இருந்ததால் தான் ஃபேஸ்புக் இதற்கு கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் விலை கொடுத்திருக்கிறது.

மேலும் சில நிறுவனங்களோடு வைத்திருக்கும் டை-அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் வாட்ஸ் அப்புக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் வாட்ஸ் அப்புடன் டை-அப் வைத்திருப்பதனால் 16 ரூபாய்க்கு இலவச ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சாத்தியமாகி இருக்கிறது.

சிக்கனமும் பல வகைகளில் வாட்ஸ் அப்பிற்கு லாபத்தை அள்ளித் தந்திருக்கின்றது எனலாம். வாட்ஸ் அப் தன் சுய விளம்பரத்திற்கு இது வரை ஒரு ரூபாய் கூட செலவழித்ததில்லை. மேலும் வாட்ஸ் ஆப் முழுவதும் மிக எளிமையானது. இந்த காரணத்தினாலேயே இதனை பராமரிக்கும் செலவுகள் மிகவும் குறைவு. மேலும் கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் வாடிக்கையாளர்களை கொண்ட இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த இன்ஜினியர்களின் எண்ணிக்கை மொத்தமே 40-ஐ விட குறைவு.

வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு நாளும் புதிதாக சேர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப்பில் பரிமாறிக்கொள்ளும் படங்களின் எண்ணிக்கை 4,000 கோடி. ஒரு புறம் இந்த எண்ணிக்கை அதிகரிக்க மறுபுறம் நம்மை பற்றிய டேட்டாபேஸிற்கான விலையும் எங்கோ ஒரு மூலையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது யாராலும் மறுக்க முடியாது.

1 பில்லியன் பாவனையாளர்களைக் கடந்த ஜிமெயில்

Image title

தினந்தோறும் நாம் பயன்படுத்தும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது ஜி மெயில். மின்னஞ்சல் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள் கூகுளின் ஜி மெயிலுக்கு அருகில் கூட வர முடியாத அளவிற்கு முன்னணியில் உள்ளது ஜி மெயில்.

இந்நிலையில் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன பங்குதாரர்களிடமும், செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள செய்தியில் ஜி மெயிலை பயன்படுத்தும் பயனார்களின் எண்ணிகை கடந்த மே மாதம் 900 மில்லியனாக இருந்தது. கடைசி காலாண்டில் இந்த எண்ணிக்கை 1 பில்லியனை கடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜி மெயிலின் சேவையை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியிலான கணக்குபடி ஜி மெயிலின் போட்டி நிறுவனமான அவுட்லூக் 420 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. யாகூ 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட தகவல்படி 280 மில்லியன் பேர் யாகூ மெயிலை பயன்படுத்துகிறார்கள்.

அப்பிள் ஐபோன்களில் விரைவில் LiFi தொழில்நுட்பம் அறிமுகம்

Image title

அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு வரும் ஐபோன்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றின் ஆகச் சிறந்த தொழில்நுட்பமும், வருங்காலத்தை கணித்து புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அவை இருப்பதுதான்.

இதன் தொடர்ச்சியாக, வருங்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஐபோன்களில் அதிவேக இணைய இணைப்புத் தொழில்நுட்பமான லை-பை (LiFi) வசதியை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தொழில்நுட்பமானது iOS 9.1 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் operating system களில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், இத்தொழில்நுட்பத்தின் வாயிலாக வினாடிக்கு 224 ஜிகாபைட் வேகத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TECHNOLOGY QUIZ உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

● இன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் – Vint Cerf

www (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக ‪மந்திரத்தை‬ உருவாக்கியவர் – Timothy John Berners-Lee

● கூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் – Larry page மற்றும் Sergey brin

● ‪விகிபீடியா‬ வலைதளத்தை உருவாக்கியவர் – jimmy wales

C++ எனும் கணினி மொழியை வடிவமைத்தவர் – Bjarne Stroustrup

MS-Dos எனப்படும் கணினி நிரலை உருவாக்கியவர் – Tim Paterson

Apple நிறுவன ஸ்தாபகர்கள் – Steve Jobs, Ronald Wayne, Steve Wozniak

CD என்ற இறுவட்டை கண்டுபிடித்தவர் – James Russell

VIRUS என்பதன் விரிவான சொல் – Vital Information Resources Under Seas

COMPUTER என்பதன் விரிவான சொல் – Commonly operated machine purposely used for trade and Engineering research

● கணினி மவுஸை கண்டுபிடித்தவர் – Douglas Engelbart

URL என்பதன் விரிவான சொல் – Uniform Resource Location

மேலும் பல சுவையான தகவல்களுக்கு kalam1st.com தொடர்ந்தும் இணைந்திருங்கள்

.Image title

உங்களுடைய அணைத்து மடிகணினி(Laptops) களையும் தொடுதிரை கணணியாக(Touch Screen) பயந்தப்டுத்த புதிய கருவி

உங்களுடைய அணைத்து மடிகணினி(Laptops) களையும் தொடுதிரை கணணியாக(Touch Screen) பயந்தப்டுத்த புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடியோ இணைப்பு உங்களுக்காக

மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை சொர்க்கம் நரகம் கிடையாது -விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்

Image title

மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள்.

ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த இந்த பூத உடல் உன்று. மற்றொன்று கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் ஆகும்.

நாம் இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிக்கிறோம். நமது நன்மை, தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ செல்கிறோம் எனவே மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பது நம்ப்பிக்கை

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது என்று 
பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:-

மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.

நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை.

நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும். மூளையும ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும்.மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான்.

அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.

மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என கூறி உள்ளார்.

மணிக்கு 20,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் விமானம்

Image title

மணிக்கு 1195 கிலோமீற்றர் வேகத்தில் பறப்பது என்பது ஒலி பயணிக்கும் வேகத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது. இந்த வேகத்தை ஒரு மெக் (Mach) வேகம் என்று கூறுவதுண்டு.

இந்நிலையில், கனடாவை சேர்ந்த ‘பொம்பார்டியர்’ விமான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறியாளரான சார்லஸ் என்பவர் ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ‘ஸ்க்ரீம்ர்’ என்ற ஹைப்பர்சோனிக் விமானத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

தற்போது அதைவிட இருமடங்கு அதிக வேகத்திலும், கான்க்ரோட் ரக விமானத்தைவிட 12 மடங்கு அதிக வேகமாகவும் பறக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ‘ஆன்ட்டிப்போட்’ என்ற விமானத்தை வடிவமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பத்துப்பேரை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த ஹைப்பர்சோனிக் விமானம் மணிக்கு 20,000 கிலோமீற்றர் வேகம்வரை பறக்கும் என சார்லஸ் கூறுகிறார்.

உதாரணமாக, இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் 5,567 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் தற்போது சுமார் 8 மணி நேரமாக உள்ளது. இந்த ‘அன்ட்டிப்போட்’ ( Antipode) விமானம் தயாராகி விட்டால் வெறும் 11 நிமிடங்களிலேயே லண்டனில் இருந்து நியூயோர்க் நகரை சென்றடைந்து விடலாம்.

நான்கு இறக்கைகள் கொண்ட ‘ஆன்ட்டிப்போட்’டின் இறக்கைகளில் ராக்கெட்டுகளை உந்திக்கிளப்பும் ‘பூஸ்ட்டர்கள்’ பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பூஸ்ட்டர்கள் சில வினாடிகளுக்குள் ஐந்து மேக் வேகத்தில் 40,000 அடி உயரத்துக்கு விமானத்தை உந்திச்செல்ல வைக்கும். பின்னர், பூஸ்ட்டர்கள் மட்டும் தனியாக கழன்று பூமிக்கு திரும்பிவிடும்.

அதன்பின்னர், விமானத்தில் உள்ள சூப்பர்சோனிக் என்ஜின் இயங்க ஆரம்பித்து, உச்சபட்ச வேகமான 24 மேக் வேகத்தை அடையும். அந்த வேகத்தில் என்ஜின் அதிகமாக சூடேறாமல் தடுப்பதற்கு விமானத்தின் மூக்கு மற்றும் இறக்கை பகுதியில் அமைக்கப்படும் சிறிய துவாரங்களின் வழியாக காற்று உறிஞ்சப்பட்டு, விமானத்தின் மையப்பகுதியை குளிரூட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த ‘ஆன்ட்டிப்போட்’ விமானத்தின் திட்ட வரைப்படத்தை இந்தியாவை சேர்ந்த அபிஷேக் ராய் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் இனி 6 புதிய உணர்ச்சிகளுடன் ”லைக்” செய்யலாம்!

Image title

சிரிப்பு, கோபம், வருத்தம், ஆச்சரியம், அன்பு, அழைப்பு என 6 வித்தியாசமான உணர்ச்சிகளை பேஸ்புக்கின் லைக் பொத்தானோடு இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தளமாக இருப்பதாலேயே பேஸ்புக் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக உருவெடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை பேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது 6 புதிய உணர்ச்சி லைக் பொத்தான்களை இணைக்கவுள்ளதாக மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

பேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளர்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்.

உணர்ச்சிகள் அடங்கிய பேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு….! அழிவின் அறிகுறியா…. பதற்றதில் மக்கள்…?

Image title

உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

உலக அழிவைக்குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடிகாரத்தில் இரவு 11 மணி 53 நிமிடங்களைக் காட்டுமாறு நேரம் குறிக்கப்பட்டது.

இந்த கடிகாரத்தின் மணி சரியாக நள்ளிரவு பன்னிரண்டு எனக்குறிக்கப்பட்டால் உலகம் அழிந்துவிடும் எனப்பொருள். தொடர்ந்து அணு ஆற்றலைப் பயன்படுத்துதல், இயற்கைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற மனிதத்தவறுகள் மூலம் பூமிக்குப் பாதிப்புக்கள் அதிகமாகும் போது இக்கடிகாரத்தின் நேரத்தை அணு அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.

இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முறை இக்கடிகாரத்தின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கடிகாரத்தின் நேரத்தை இரவு 11 மணி 57 நிமிடங்களாக அணு அறிவியலாளர்கள் தற்போது மாற்றியுள்ளனர். இது உலக வாழ்க்கைக்கு ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.