2015 ம் ஆண்டு தான் ரொம்ப ரொம்ப ஹொட்! நாசா + நோவா தகவல்

Image title

2015ம் ஆண்டுதான் பூமியிலேயே இதுவரை பதிவான வெப்ப நிலையிலேயே அதிக வெப்ப நிலை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்த விவரங்களை நாசா மற்றும் “நோவா” எனப்படும் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டலவியல் நிர்வாகக் கழகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA).) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

1880ம் ஆண்டு முதல் பூமியில் வெப்ப நிலையைப் பதிவு செய்யும் முறை தொடங்கியது. அது முதல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலையை ஆய்வு செய்து நாசாவும், நோவாவும் 2015ம் ஆண்டுதான் இதுவரை பூமியிலேயே வெப்ப நிலை அதிகம் பதிவான ஆண்டு என்று கூறியுள்ளது.

இதற்கு முன்பு 2014ம் ஆண்டுதான் வெப்ப நிலை அதிகமான வருடமாக இருந்தது. தற்போது அதை விட 0.13 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை 2015ல் கூடுதலாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன்பு 1998ம் ஆண்டுதான் அதிக வெப்ப நிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Image titleImage title

இணையத்தளம் வழியாக ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் சாத்தியம்: ஆய்வு முடிவு

மொபைல் போன்களில் அண்ட்ரோய்ட் செயற்படுவது போல, ஒப்டிக்கல் தொழில்நுட்ப உதவியுடன் இணையத்தளம் மூலம் ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என முதன்முறையாக ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவிவரும் இணையத்தள உட்கட்டமைப்புப் பற்றாக்குறை பிரச்சினைக்கு இந்த ஆய்வு தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பல்வேறு வகையான பயன்பாடு காரணமாக அதிகரித்து வரும் அலைவரிசைக்கான தேவைக்கும் இது தீர்வாக அமையும்.

“இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள ஹார்ட்வெயார் மற்றும் சொப்ட்வெயார் தொழில்நுட்பங்கள், ஒப்டிக்கல் இணைய உட்கட்டமைப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். ஒப்டிக்கல் வலையமைப்பில் உள்ள கடும் சிக்கல் தவிர்க்கப்பட்டு, புரோகிராமர்கள், செயலி உருவாக்குபவர்களுக்கு ஒளியின் வேகத்தில் செயற்படும் இணைய செயலிகளை உருவாக்க வாய்ப்பாக அமையும்”

என பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மின்னியல், மின்னணுவியல் துறை பேராசிரியர் ரெசா நெஜபதி தெரிவித்துள்ளார்.

அதாவது, கூகுள் அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிள் iOS ஆகிய செயலிகளின் அடிப்படைச் செயற்பாட்டைப் போல புதிய தொழில்நுட்பம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

செவ்வாயில் ஆய்வுக்கலத்தை கூட்டாக தரையிறக்கும் இந்தியா – பிரான்ஸ் கைச்சாத்தானது ஒப்பந்தம்

Image title

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை இறக்கும் அடுத்த திட்டத்தில் பிரான்ஸும் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் பிரதமர் பிரான்காயிஸ் ஹொலண்டே இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி செவ்வாய் கிரகத்திற்கு உள்நாட்டு தயாரிப்பான பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் மூலம் மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளி பயண திட்டங்களில் மிகவும் குறைந்த பட்ஜெட்டாக ரூ.450 கோடி செலவில், செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா மங்கள்யான் செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்தது.

இதையடுத்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடும் முக்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்க, ரஷ்யா, ஐரோப்பாவைச் தொடர்ந்து 4ஆவதாக இந்தியா இடம் பிடித்தது. செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு தகவல் மற்றும் படங்களை மங்கள்யான் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளது.

மங்கள்யான் அனுப்பிய படத்தின் மூலமாக செவ்வாயில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் நாசா உறுதி செய்து உலகுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை தரையிறக்கி ஆய்வுகள் மேற்கொள்ள இந்தியா புதிய திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டத்தில், பிரான்ஸும் இணைவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஹொலண்டே ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர்.

இரு தலைவர்களிடையே கையெழுத்தாகிய 14 ஒப்பந்தங்களில் ரபேல் போர் விமானம் வாங்குவது மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது பற்றி பிரான்ஸ் விண்வெளி நிறுவனத் தலைவர் ஜீயன் யுவஸ் லெகல் கூறுகையில், ‘‘செவ்வாயில் தரையிறங்குவது சுலபமானதல்ல. அப்படி இருந்தும், இந்த திட்டத்தில் மிகவும் விருப்பத்துடன் ஈடுபடுவோம். எங்களின் அறிவியல் தொழில்நுட்பங்களை செவ்வாய், வீனஸ் கிரகங்களின் ஆய்வுகளுக்கு இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வோம்’’, என்றார்.

புதிய மாற்றங்களுடன் இவ்வாண்டில் வெளிவரவுள்ள ஸ்மார்ட்போன்கள்

Image title

மார்ட்போன்களின் வளர்ச்சி ஆண்டுதோறும் புதிய பரிணாமத்தை பெற்று வருகிறது. அந்த வகையில், 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் பல புதிய மாற்றங்கள் காணப்பட்டன.

குறிப்பாக, குறைந்த விலை மற்றும் இடைநிலை போன்களின் வடிவமைப்பு, வேகத்திறன் ஆகியவை மாறியிருந்தன. அதேபோல், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் காணப்படுகின்றன.

2K மற்றும் 4K ஸ்கிரீன்கள்

விலையுயர்ந்த டி.வி.க்களில் எச்.டி. டிஸ்பிளே இருப்பதை போன்று இப்போது பல பெரிய ஸ்மார்ட்போன்களின் திரைகளில் எச்.டி. தொழில்நுட்பம் உள்ளன, 2560 X 1440 பிக்சல்கள் ரெசலூசனுடன் அதாவது 2K டிஸ்பிளே உடன் பல ஸ்மார்ட்போன்கள் வெளிவந்தன. இதைபோலவே இந்த ஆண்டு வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் அதைவிட அதிக துல்லியமாக 4K டிஸ்பிளே பெரும்பாலான போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3GB மற்றும் 4GB ரெம்

சென்ற ஆண்டை பொறுத்தவரை குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களிலும் கூட பெரும்பாலும் 1GB மற்றும் 2GBரெம் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, பல்வேறு ஆப்ஸ்கள் இயங்குவதற்கு பின்புலமாக இந்த ரெம் மிக முக்கியமாகும். இந்நிலையில், இந்த ஆண்டு 3GB மற்றும் 4GB ரெம் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5GB மற்றும் 6GB ரெம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதிலும் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

கைரேகை ஸ்கேனர்கள்

பாஸ்வேர்டு மற்றும் பெட்டன்களை பயன்படுத்தி செல்போன்களை அன்லாக் (unlock) செய்துவரும் நிலையில், இதற்கு முடிவு கட்டும் வகையில் கைரேகை ஸ்கேனர்கள் ஸ்மார்ட்போன்களில் பரவலாக வரவுள்ளன. பாதுகாப்பிற்கு இதைவிட சிறந்தது வேறெதுவும் இருக்க முடியாது. தற்போது கூல்பேட் நோட் 9 போன்ற சில ஸ்மார்ட்போன்களில் இந்த வசதிகள் உள்ளன. விரைவில் 10,000 ரூபாவிற்குற்பட்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன்களிலும் இந்த வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்லிய பட்டைகள்

ஸ்மார்ட்போனை சுற்றி உள்ள கருப்பு நிற போர்டர் பெசல்ஸ் என அழைக்கப்படுகிறது. விலை குறைந்த போன்களில் இந்த பட்டை பெரியதாக இருக்கிறது. ஆனால், சென்ற ஆண்டு பல பிரபல மொடல்களில் மெல்லிய பட்டைகள் காணப்பட்டன. இது ஸ்மார்ட்போன் திரையின் அளவை முழுமையாக நாம் பயன்படுத்த உதவுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் மிகவும் மெல்லிய போடருடன் போனின் விளிம்பு வரை நாம் டச் செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

32 GB இண்டர்நெல் ஸ்டோரேஜ்

இந்த ஆண்டு 32GB மற்றும் 64GB அளவுகளுடன் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

USB டைப் – சி

ஏற்கனவே, சென்ற ஆண்டு ஒன் பிளஸ், கூகுள் நெக்சஸ், ஜியோனி போன்களில் சில மொடல்களில் USB டைப்-சி போர்ட்டுகள் இருந்தன. தற்போதுள்ள மைக்ரோ USB போர்ட்டை விட இது வேகமானது. வேகமாக டேட்டாக்களை பரிமாற்றம் செய்யக்கூடியது. விரைவில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இந்த வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெமரா

கெமராவை பொறுத்த வரை சென்ற ஆண்டு பிக்சல்கள் அதிகரித்து காணப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு பொயிண்ட் மற்றும் ஷூட் கெமராக்களை ஒப்பிடும் வகையில் கெமராவின் தரத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரட்டை லென்ஸ், ஆட்டோ போக்கஸ், முன்பக்க கெமராவில் இரட்டை எல்.இ.டி பிளாஷ் லைட்டுகள் போன்றவை இருக்கும்.

சார்ஜிங் வேகம்

செல்போனில் சார்ஜ் ஏறும் வேகமானது நாம் எத்தனை ஆம்ப் கொண்ட சார்ஜரை உபயோகப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே உள்ளது.

தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 1 ஆம்ப் அவுட்புட் கொண்ட சார்ஜர்களுடன் வெளிவருகின்றன. இதைவிட 2 ஆம்ப் சார்ஜர்கள் இருமடங்கு வேகமானதாகும். இந்த ஆண்டு வெளிவரும் போன்களில் USB டைப் – சி போர்ட்டுகளின் வாயிலாக வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் வெளிவரலாம்.Image title

ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம்

Image title

ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம் (Fifth-generation jet fighter) என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட போர் விமானத்தின் வகைப்பாடு ஆகும். 2015 வரை இது ஒன்றே மிக அதிக நவீன தொழில்நுட்பங்களை கொண்ட போர் விமானமாகும். நான்காம் தலைமுறை போர்விமானங்களிலிருந்து இது மேம்படுத்தப்பட்டது.

ஆயுதமேந்திய இந்த விமானத்தை ரேடாரால் கூட கண்டுபிடிக்க இயலாது. மேலும் ரேடார் இடைமறிப்புக்கு குறைந்த நிகழ்தகவு மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் மின்னணுவியல் மற்றும் நவீன கணினி அமைப்பு போன்ற மேம்பாடுகளை ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம் கொண்டுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஒரே ஐந்தாம் தலைமுறை ஜெட் போர்விமானம் ஐக்கிய அமெரிக்க வான்படையில் பயன்படுத்தப்படும் போர்விமானம் லாக்ஹீட் மார்டின் எப்-22 ராப்டர் ஆகும்.

எப்-22

Image title

எப்-22 அல்லது எப்-22 ரப்டர் ஒரு தனி இருக்கை, இரட்டை என்ஜின், ஐந்தாம் தலைமுறை, மிகை திசையமைவு மாறுவீதம் மற்றும் மறைந்து தாக்கும் நுட்பம் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும்.

Image title

தொழில்நுட்பத் தகவல்கள்

  • நீளம்: 62 அடி 1 அங் (18.90 மீட்டர்)
  • உயரம்: 16 ft 8 in (5.08 m)
  • இறக்கையின் பரப்பளவு: 840 ft² (78.04 m²)
  • வெற்று நிறை: 43,430 pound (mass) (19,700 kg)
  • ஏற்றப்பட்ட எடை: 64,460 lb (29,300 kg)
  • பறப்புக்கு அதிகூடிய எடை: 83,500 lb (38,000 kg)

எப்-35Image title

எப்-35 அல்லது எப்-35 மின்னல் II ஒரு தனி இருக்கை, தனிப் பொறி, ஐந்தாம் தலைமுறை, பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும்.

தொழில்நுட்பத் தகவல்கள்

  • நீளம்: 51.4 அடி (15.67 மீ)
  • உயரம்: 14.2 அடி பி – 14.2, சி: 14.9 அடி (4.54 மீ) (4.33 மீ)
  • இறக்கையின் பரப்பளவு: 460 அடி² (42.7 மீ²)
  • வெற்று நிறை: 29,300 ப (13,300 கி)
  • ஏற்றப்பட்ட எடை: 49,540 ப எப்-35பி: 47,996 ப (21,771 கி); எப்-35சி: 57,094 ப (25,896 கி) (22,470 கி)

சுகோய் பிஏயூ எப்ஏ
Image title
பிஏயூ எப்ஏ (PAK FA) என்பது உரசிய வான்படைக்கான ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தி ஆகும். டி-50 பிஏயூ எப்ஏ திட்டத்திற்காக சுகோய் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட வானூர்தி ஆகும். இவ்வானூர்தி மறைந்து தாக்கும், இரட்டைப் பொறி கொண்ட, தனி இருக்கை தாரை வானூர்தி ஆகும். இது உரசிய வான் படையில் முதலாவதாக செயற்படும் மறைந்து தாக்கும் வானூர்தியாக இருக்கவிருக்கிறது. பல பாத்திர வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

செங்டு ஜே-20

செங்டு ஜே-20 (Chengdu J-20) என்பது மறைந்து தாக்கும், இரட்டைப் பொறி கொண்ட, ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தி மாதிரி ஆகும். இது சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ வான்படைக்காக செங்டு பறப்பியல் விண்வெளிக் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படுகிறது. ஜே-20 தன் கன்னிப் பறப்பை 11 சனவரி 2011, அன்று மேற்கொண்டது. இது 2017-2019 ஆம் ஆண்டளவில் செயற்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சூரியக் குடும்பத்தில் புதிய கோள்

Image title

சூரிய குடும்பத்தில் புதிதாக 9 ஆவது கோளை வானியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் தற்போது 8 கோள்கள் உள்ளன. ஏனெனில் 9 ஆவது கோளாக கருதப்பட்ட புளுட்டோ சூரிய வட்டப்பாதைக்கு அப்பாற்பட்டு இயங்குகிறது என்றும், அது சுயஈர்ப்பு சக்தி கொண்டது என்றும் கண்டறியப் பட்டது. இதனால், இது கோள்களின் பட்டியலில் இருந்து 2006 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

இந்நிலையில், சூரிய குடும்பத்தில் பூமியை விட 10 மடங்கு எடை கொண்ட புதிய கோளை கண்டுபிடித்துள்ளனர்.

இது சூரிய குடும்பத்தின் 9 ஆவது கோள் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி மையத்தின் விஞ்ஞானிகளான கான்ஸ்டான்டின் பேட்டிஜின், மைக் பிரவுன் ஆகிய இருவரும்தான் இதை கண்டறிந்துள்ளனர்.

இது சூரியனை ஒருமுறை சுற்றி வர சுமார் 20,000 ஆண்டுகள் ஆகிறது. புதிய கோள், சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை விட, 50 மடங்கு தொலைவில் உள்ளது. புளூட்டோவை விட 5,000 மடங்கு எடை கொண்டது. இதை கண்களால் காண முடியவில்லை என்றாலும், அது இருப்பதற்கான அறிகுறி தெளிவாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.