பாடசாலை மாணவியொருவர் அவரின் தாயாரின் விருப்பத்தின் பேரில் அழைத்துச்செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞரொருவரும் குறித்த தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 வயதுடைய குறித்த இளைஞர் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகியோர் சிலாபம் - மஹாவெவ பிரதேசத்தின் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் சிலாபம் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , அவரின் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 5ம் திகதி சிலாபத்தின் குறித்த பிரதேசத்தை சேர்ந்த கிராம உத்தியோகஸ்தர், இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் , தமது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 12 வயது பாடசாலை மாணவியொருவர் அவரின் தாயின் விருப்பத்தின் பேரில் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை பேணி வருவதாகவும் , இது தொடர்பில் அவரின் தாய் உரிய வகையில் கண்காணிப்பதில்லை எனவும் , மாணவியின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் , காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் , குறித்த மாணவியை அவரது தாய் 19 வயது இளைஞருடன் அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து , மாணவியின் தாய் கைது செய்யப்பட்டு துஷ்பிரயோக சம்பவத்திற்கு உதவி குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் , கடந்த செப்டம்பர் மாதம் 09ம் திகதி காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகநபர் மற்றும் மாணவி குடாவெவ பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
தாயின் விருப்பத்தில் 12 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகம்
Reviewed by Admin
on
October 17, 2017
Rating:
Reviewed by Admin
on
October 17, 2017
Rating:

No comments: