Responsive Advertisement 2

எருமைமாடு வெட்டியவர் இருவர் கைது



கிரான் புலியாந்தகல் பிரதேசத்தில் இருந்து எருமை மாடு திருடி வெட்டப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட போது முச்சக்கர வண்டியையும், இரண்டு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.





வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இரவு நேரங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.





இதனடிப்படையில் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் கிரான் பிரதேசத்தில் வைத்து குறித்த முச்சக்கர வண்டியையும், இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.





கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் பிறைந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரும், கிரான் பிரதேசத்தை சேர்ந்த தமிழர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.





-முர்ஸித்-








எருமைமாடு வெட்டியவர் இருவர் கைது எருமைமாடு வெட்டியவர் இருவர் கைது Reviewed by Admin on October 18, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3