நேற்றைய தினம் 17 ஆம் திகதி புதூர் காட்டுப்பகுதியில மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குறறிகளை கடத்த முற்பட்ட நிலையில் காணப்பட்ட பார ஊர்தியொன்றில் வன வள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் பார ஊர்தியின் சாரதி தப்பி ஓடியுள்மையினால் பார ஊர்தியை மீட்ட வன வள அதிகாரிகள் பார ஊர்தியை தமது காட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
இதேவேளை வேலங்குளம் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாலை மர தீராந்திகள் உட்பட பெறுமதியான மரங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை இன்று அதிகாலை வேலங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் பாலை மரக்குற்றிகள் மற்றும் தீராந்திகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நெடுங்கேணி வட்டார வன வள அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும்தெரிவித்தனா்
இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நெடுங்கேணி வட்டார வனவள அதிகாரி து. கௌதன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நிலையில் வன வள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:
No comments: