அண்மையில் கிரேண்ட்பாஸில் காணாமல் போயிருந்த மூன்று யுவதிகளில் இருவர் வெல்லம்பிட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இவ்வாறு இன்று முற்பகல் சரணடைந்தவர்கள் 19 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொலன்னாவ சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 3 யுவதிகள் கொழும்பு – க்ரேண்பாஸ் பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை காணாமல் போயினர்.
இந்தநிலையில் இன்று அவர்கள் கம்பஹாவில் இருந்து சென்று காவற்துறையில் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காணாமல் போன 14 வயது யுவதி குறித்து இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது
கொழும்பில் காணாமல் போன பெண்கள் பொலிஸில் சரண்!
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:
No comments: