Responsive Advertisement 2

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு


மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று காலை மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் மதியம் மேலதிகமாக ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளன.


அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு Reviewed by Admin on November 30, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3