Responsive Advertisement 2

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணிதபாட ஆசிரியர்




நீதிபதி குறித்த ஆசிரியரைக் குற்றவாளியாகக்காணப்பட்டுள்ளதையடுத்து இந்த வழக்கானது ஓர் விசித்திரமான வழக்காகும் பள்ளிச்சிறுவன் தனக்கு இலவசமாக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு எதிராக தன்னை அவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும் என்று தெரிவித்திருந்தார்.





வவுனியாவில் கணிதபாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவருக்கு பிரத்தியோக பரீட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரிவித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்றத்திற்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சிசிமகேந்திரன்  குறித்த ஆசிரியரை குற்றவாளியாக காணப்பட்ள்ளதுடன் அடுத்தவராத்திற்கு தீர்ப்பிற்கு ஒத்திவைத்துள்ளார்.





கடந்த 2011.11.22 மற்றும் 23ஆம் திகதிகளில் செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் 10ஆம் வகுப்பு படித்த சிறுவன் ஒருவரை கணதபாட ஆசிரியரான 34வயது நிரம்பிய ஒருவர் இவர் 2014ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆனால் சம்பவத்தின்போது திருமணம் முடித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த ஆசிரியர் தனது வீட்டிற்குப்பக்கத்தில் தனியார் வகுப்பு ஒன்றினை நடாத்தி வந்திருந்ததுடன் மாணவர்களை பரீட்சைக்கு பிரத்தியோகமாக தயார்ப்படுத்துகின்ற சேவையையும் மேற்கொண்டு வந்துள்ளார்.





இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை அவரது வீட்டில் தங்கியிருந்தவேளையில் கடந்த 2011.11.22 மற்றும் 23ஆம் திகதிகளில் தன்னிடம் கணிதபாடம் பிரத்தியோக வகுப்பிற்கு வந்து இரவில் அவரது வீட்டில் தங்கி நின்று படித்த 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக சாட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. 





மேலும் குறித்த நபருக்கு எதிராக குற்றம் இன்று வவுனியா மேல் நீதிமன்றில் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்நிலையில் எடுத்தக்கொள்ளப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். 





இவருக்கான தீர்ப்பினை அடுத்தவராம் வழங்கவுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.





இவ்வழக்கினை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்





-சுடர்-





சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கணிதபாட ஆசிரியர் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த கணிதபாட ஆசிரியர் Reviewed by Admin on November 29, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3