மிஹிந்தலை பொலிஸ் பிரிவு எல்லைக்குட்பட்ட கல்மடுவ - இஹலகம, பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த கே.ஐ.டப்ளியூ. நெரஞ்சன் ரத்னசிறி ( வயது 15 ) என்ற சிறுவன், கடந்த 5 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
ஐந்து அடி உயரமும், பொது நிறமும் கொண்ட இச்சிறுவன், கடைசியாக கறுப்பு நிற ரீ சேட்டும், கறுப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்ததாக, இச்சிறுவனின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இச்சிறுவன் இஹலகம பகுதியிலேயே கூடுதலாகச் சுற்றித் திரிவதாகவும், அங்கிருந்தே திடீரெனக் காணாமல் போயுள்ளதாகவும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
இச்சிறுவனைப் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 025 22 66 522, 071 84 03 951, 071 85 91 206 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, உடனடியாக அறியத்தருமாரும் பொதுமக்களைப் பெற்றோர்கள் கேட்கின்றனர்.
பொத்தான பிரதேசத்தைச் வயது 15 காணவில்லை - கண்டுபிடிக்க உதவுங்கள்
Reviewed by Admin
on
December 13, 2017
Rating:
Reviewed by Admin
on
December 13, 2017
Rating:

No comments: