வவுனியா ஓமந்தை வேடர் மகிழங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கட்டிடம் விரிசல் ஏற்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சையானது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் பல தகவல்கள் அம்பலத்திற்கு வந்தள்ளது.
குறித்த பாடசாலையின் கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்ட நிலையில் அது செய்தியாக வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.>
வவுனியா ஓமந்தை வேடர் மகிழங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கட்டிடம் 2015 ஆம் ஆண்டு தேசிய போட்டி கேள்வி மூலம் கேள்வி கோரப்பட்டு ரூபா 48 இலட்சத்து 15 ஆயிரத்து 75 ரூபாவுக்கு ஒப்பந்த வேலை வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.டி.ஜி திட்டத்தின் கீழ் மூவாயிரம் சதுர அடி வகுப்பறை கட்டிடமானது 20150710 ஆரம்பித்து 20151026 கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் வவுனியா ஓமந்தை மகிழங்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் தங்கள் கிராமத்தில் கட்டப்பட்ட பாடசாலையின் கட்டிடத்தின் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட அத்திவார கட்டிடம் தரமற்று இருப்பதாக 01102015 அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனிடம் கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பாடசாலை கட்டிடப் பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் நேரடியாக சென்று அத்திவாரத்தை ஆய்வு செய்து அத்திவாரத்தின் தரம் உறுதியாக உள்ளதாக கல்வி அமைச்சருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு நீங்கள் செய்த முறைப்பாட்டால் கல்வி அமைச்சிற்கு ஏற்பட்ட நட்டத்திற்கு யார் பொறுப்பு?? என்ற கேள்விக்குறியுடன் வடக்கு முதலமைச்சரியால் கையப்பமிடப்பட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பாடசாலையின் கட்டிடத்தில் விரிசல் விழுந்துள்ளது என 04122017 அன்று செய்திகள் வெளிவந்த நிலையில் வடமாகாண கட்டிடங்கள் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டபோது வவுனியா ஓமந்தை வேடர் மகிழங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கட்டிடத்தின் தரப்பரிசோதனை மற்றும் நிர்மாணப்பணிகள் எதுவும் எமது திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவில்லை என எழுத்து மூலம் அறிக்கை வழங்கியுள்ளனர்.
பாடசாலை கட்டிடம் தொடர்பாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து இன்றையதினம் (08) குறித்த பாடசாலையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கணக்காய்வு பிரிவினர் ஆய்வு நடவடிக்கைடியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பாடசாலை கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசல் தொடர்பாக வெளிவந்த செய்தியால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பாடசாலைக்கு சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்ட நிலையில் பாடசாலையின் அதிபரினால் மூன்று பேருக்கு எதிராக வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிபரின் அனுமதியில்லாமல் பாடசாலை வளாகத்திற்குள் சென்றமை, வேலியின் கம்பியை வெட்டி உள்ளே சென்றமை, ஊடகத்திற்கு பொய்யான தகவல் வழங்கியமை, பாடசாலை கதவினை உடைத்தமை என நான்கு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கிரம மக்கள் கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்தின் பாடசாலையில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பாக பாடசாலை அதிபருக்கு எந்நவிதமான சம்பந்தமும் இல்லாதபோதும் அதிபர் கட்டிடம் விடயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதோடு கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக எமது கிராம பாடசாலையில் அதிபராக பணியாற்றி வரும் நிலையில் பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கருசனையற்றவராகவே இருக்கிறார். வவுனியா நகரில் வசித்து வரும் அதிபர் எமது கிராம பாடசாலையில் காவலாளி ஒருவரை ஏற்படுத்தி தராத நிலையில் கிராம மக்களாகிய நாங்களே பாடசாலையை பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குறித்த அதிபரின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக தரம் ஐந்து வரைக்கும் கல்வி கற்கும் வசதிகள் இருந்தும் அப்பாடசாலையில் பன்னிரண்டு மாணவர்களே கல்வி கற்று வருவதுடன் கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள் கல்வி கற்கும் நிலையில் அவர்களின் கல்வி தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. என்பதுடன் நிகழ்வுகள் நடத்துவதனால் மாணவர்களிடம் பணம் அறவிடப்படுவதாகவும் இப்பாடசாலை தொடர்பாக வவுனியா வடக்கு வலயம் கரிசனையற்று இருக்கிறது என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
மகிழங்குளம் அ.த.க. பாடசாலை கட்டிடம் விரிசல் - வெளிக்கிளம்பும் தகவல்கள்!!
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:
No comments: