வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் பற்றி தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி சென்ற முச்சக்கர வண்டியை மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்படும் போது மோதி விபத்துக்கள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா செய்தியாளர்
வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து ஒருவர் படுகாயம்
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:
No comments: