க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று (12) காலை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றது.
5116 மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சையை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய, பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் தகுதி பெற்றுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 514200 பேரும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 174373 பேரும் தோற்றுகின்றனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சை தொடர்பிலான முறைப்பாடுகளை 1911, 0112784208, 0113188350 எனும் தொலைபேசி இலக்கங்களினுாடாக தெரியப்படுத்தலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Reviewed by Admin
on
December 12, 2017
Rating:
Reviewed by Admin
on
December 12, 2017
Rating:

No comments: