Responsive Advertisement 2

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் வாழ்த்துச் செய்தி



2017ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைவதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.





மேலும், இப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் தமது துறையில் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு அதில் சிறப்புற நிபுணத்துவம் அடைந்து இப்பிரதேசத்திற்கும், இம்மக்களுக்கும், இந்நாட்டிகும் சிறந்த சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டுமெனவும் மனமார வாழ்த்துகின்றேன். 





மேலும் அவர் தனது வாழ்த்து செய்தியில் 





இவ்உயர்தர பரீட்சையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதேபோன்று எமது மாகாணம் மற்றும் நாடளாவிய ரீதியிலும் சிறந்த சித்தியுடன் வைத்திய துறை, பொறியியல் துறை, தொழிநுட்பத் துறை, முகாமைத்துவ வர்த்தக துறை மற்றும் கலைத்துறை, ஆகிய துறைகளுக்கு பல மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.





இது ஓர் மகிழ்ச்சிகரமானதும், பெருமை சேர்க்கக் கூடியதொரு விடயமாகும் உள்ளதோடு, சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நழ்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.





அதே நேரம் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்படாத மாணவ மாணவியர்களுக்கும் வருத்தத்தினை தெரிவிப்பதோடு அவர்கள் சோர்ந்து துவண்டு விடாமல், மீண்டுமொரு முறை முயற்சி செய்து க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்று பல்கலைக் கழகத்திற்கு செல்ல வேண்டுமெனவும் அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக வாழ்த்துகின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.





எம்.ரீ. ஹைதர் அலி




க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் வாழ்த்துச் செய்தி க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் வாழ்த்துச் செய்தி Reviewed by Admin on December 28, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3