வவுனியா - மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹாட்வெயார் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வாகனம் ஒன்று வருகைத்தந்த போதும் குறித்த வண்டியில் தண்ணீர் இல்லை என தெரிவித்து அந்த வண்டி திரும்பிச் சென்றுள்ளது.
எனினும் சுமார் 2 மணித்தியாலத்திற்கு மேலாக வன்பொருள் அங்காடி தொடர்ந்து எரிந்து சாம்பலாகியது.
தீயணைப்பு வாகனம், பொலிசாரின் தண்ணீர் பவுசர் என்பன சம்பவ இடத்திற்கு வந்த போதும் அவர்களின் மந்தமான செயற்பாட்டால் தீயை கட்டுப்படுத்த முடியவில்ல.
இந்த தீ விபத்தினால் வவுனியா - மன்னார் பிரதான வீதிகள் மூடப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் உள்ள விமானப் படையிடம் தீ அணைப்பு வாகானம் இருந்த போதும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-வவுனியா நிருபர்-
வவுனியாவில் ஹாட்வெயார் தீயில் எரிந்து முற்றாக நாசம்: தீ அணைப்புப் படை மந்தச் செயற்பாடு
Reviewed by Admin
on
December 02, 2017
Rating:
No comments: