Responsive Advertisement 2

சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் முறைகேடு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி விலகல்.



வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முறைகேடு மேற்கொண்டுள்ளார். இதையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் வழங்;கப்பட்டுள்ளது. தற்போது விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் தனது பதவிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவர் மேற்கொண்டதாக கூறப்படும் ஊழல் விசாரணைகள் இடம்பெறுமா அல்லது கைவிடப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்கள்.





வவுனியா வடக்கு பிரதேச செலயகப்பிரிவில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் தொடர்புபட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விசாரணகளுக்கு உட்படுத்துமாறும் மாவட்ட செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதையடுத்து வவுனியா வடக்கு பிரதேச செலயகப்பிரிவில் வீட்டுத்திட்டம் வழங்கலில் தொடர்புபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விசாரணைகள் மேற்கொள்வதாகத் தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டனர். எனினும் எவ்வித விசாரணகளும் இடம்பெற்வில்லை அத்துடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் மேற்கொள்வில்லை. கடந்த 2012,2013,2014, ஆகிய வருடங்களில் புளியங்குளம், இராமனூர், வாடி வீடு, போன்ற பகுதிகளில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திலே குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தாகள் முறைகேடு மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.





இதையடுத்து தற்போது விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியானதும் குறித்த வீட்டுத்திட்டத்தில் தொடர்புபட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் அண்மையில் விசாரணைகளுக்கு முகம் கொடுக்கமுடியாமல் தனது பணிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஊழல் புரிந்தவர்கள் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 





சுடர்-




சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் முறைகேடு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி விலகல். சமுர்த்தி வீட்டுத்திட்டத்தில் முறைகேடு அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி விலகல். Reviewed by Admin on December 18, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3