Responsive Advertisement 2

பிணவறையிலும் பாதுகாப்பில்லை? வைத்தியசாலையில் பெண்ணின் சடலத்திற்கு நடந்த சோகம்



பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களில் ஒன்றை, மரநாய் (கலவெத்தா) கடித்த சம்பவமொன்று, சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சடலத்தின் பல பாகங்களை, அந்த மரநாய் கடித்துச் சேதப்படுத்தியுள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் சடலத்தையே, குறித்த மரநாய் கடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   




அச்சடலத்தின் முகம் உள்ளிட்ட பல பாகங்கள், மரநாய் கடித்ததால், முற்றாகச் சிதைவடைந்த நிலையிலேயே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.   




இச்சம்பவத்தால், குறித்த பெண்ணின் உறவினர்கள் பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதோடு, சடலத்தைச் சீர்செய்யும் வகையில், முந்தல் பிரதேசத்தில் அமைந்துள்ள மலர்ச்சாலையொன்றிடம், நேற்றைய தினம் (17) சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.   




இச்சம்பவத்தை அடுத்து, வைத்தியசாலைப் பிணவறையிலிருந்து சடலமொன்றை, உறவினர்கள் பொறுப்பேற்கும் போது, நன்றாக அவதானித்துப் பெற்றுக்கொள்ளுமாறும், ​இது தொடர்பில் ​தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சிலாபம் பிரதான வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஐ.சிராஜ் தெரிவித்துள்ளார். 




பிணவறையிலும் பாதுகாப்பில்லை? வைத்தியசாலையில் பெண்ணின் சடலத்திற்கு நடந்த சோகம் பிணவறையிலும் பாதுகாப்பில்லை? வைத்தியசாலையில் பெண்ணின் சடலத்திற்கு நடந்த சோகம் Reviewed by Admin on December 18, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3