வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் இன்று (04.12) திங்கட்கிழமை மாலை 2 மணிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. சீட் நிறுவனம் ,சேவ் அக்ற் , வரோட், ஓகான் மற்றும் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் சமூக விஞ்ஞான மன்றம் என்பன மாவட்ட சமூக சேவை அலுவலகத்துடன் இணைந்து இத்தினத்தை உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர்.
தேசிய கல்வியியல் கல்லூரியின் புதிய பீடாதிபதி க. சுவர்ணராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரதம விருந்தினராக முன்னாள் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் கலந்து கொண்டார் . சீட் நிறுவன முகாமை அணிப்பிரதிநிதி மா.சிவகுமார் , வரோட் நிறுவன இயக்குனர் வண ஜோன் கிறிஸ்ரி அடிகளார் , ஓகான் நிறுவன திருமதி லலிதா , சேவ்அக்ற் ஜெகதீஸன் மற்றும் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மாவட்ட செயலக, பிரதேச செயலக திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கு கொண்ட நிகழ்வில் வரவேற்புரையை விரிவுரையாளர் எஸ்.கமலகுமார் நிகழ்த்தினார். கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனம் சீட் மற்றும் வரோட் நிறுவன மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.
சிறப்பம்சமாக அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்களிடையே நடந்து வரும் வினாடி வினாப்போட்டியின் அரை இறுதிப்போட்டிகளும் இன்று மண்டபத்தில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வவுனியா மாவட்ட செயலகம் ,வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வெண்கலச்செட்டிகுள பிரதேச செயலகம், கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பன பங்கு பற்றின. இதில் வவுனியா மாவட்ட செயலக அணி மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அணி என்பன இறுதிப்போட்டிக்கு தெரிவாகின. மூன்றாம் இடத்தை கமநல அபிவிருத்தி திணைக்களம் பெற்றுக்கொண்டது. இறுதிப்போட்டி 12.12.2017 வவுனியாவில் நடைபெறவுள்ள மாகாணமட்ட மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கல்வியியல் கல்லூரியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு.
Reviewed by Admin
on
December 05, 2017
Rating:
Reviewed by Admin
on
December 05, 2017
Rating:




No comments: