Responsive Advertisement 2

சாய்ந்தமருது உள்ளுராட்ச்சி மன்ற நவம்பர் எழுச்சியும், கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான சுயேட்சை குழு தெரிவும்.



சாய்ந்தமருது உள்ளுராட்ச்சி மன்றத்தினை பெறும் நோக்கிலான நவம்பர் எழுச்சி போராட்டமானது எமது பள்ளிவாசலை மையப்படுத்தி பள்ளிவாசல் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு கட்சி பேதங்களுக்கப்பால் சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமைப்பட்ட போரட்டமானது நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்தே அது இன்று பாராளுமன்றத்தில் பேசுபொருளாக காணப்பட்டமையானது சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமைப்பட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிப்படிகளில் ஒன்றாகும்.



இருந்தும் எமது போரட்டத்தின் எதிர் வடிவமாக கல்முனையை நான்காக பிரித்தே சாய்ந்தமருக்கு உள்ளுராட்ச்சி மன்றத்றத்தை என்றவாதத்தினை அதாவது சாய்ந்தமருக்கு தனியே கொடுத்தால் கல்முனை தமிழர் தரப்புக்கு சென்று விடும் எனும் எனும் பொய் பிரச்சாரத்தை மையப்படுத்தி எமது நியாயபூர்வமான கோரிக்கையை மலினப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நாம் எதிர்நோக்கியுள்ளோம் .


இத்தேர்தலில் எமது கோரிக்கையினை வென்றெடுக்குமுகமாக சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் நெறிப்படுத் தலிலான சாய்ந்தமருது பிரகடணத்தின் பிரகாரம் சுயேட்சை குழு களம் இறங்குவது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் நடைபெறும் இந்நாட்களில் சுயேட்சை குழுவுக்கான வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் எமது பள்ளிவாசல் நிர்வாகம் மிகுந்த அவதானமும் , எதிர்கால சிந்தனையுடனும் , ஒற்றுமைப்ப்ட எமது சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமையை சிதைக்க திரைமறைவில் முயற்ச்சிகளை தகர்த்தெரியும் நோக்குடனும் எமது சாய்ந்தமருது ஆறு (6) வட்டாரங்களுக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவரின் தலைமையிலான உலமாக்களை உள்ளடக்கிய வேட்பாளர்களாக ஒரு முன்மாதிரியான வேட்பாளர்களை தெரிவு செய்வது இன்றைய காலகட்டத்தின் தேவையாகும். இவ்வாறு உலமாக்களை கொண்ட சுயேட்சை அணியை எமது பள்ளிவாசல் தெரிவு செய்யுமnனால் அதுவே தேவையற்ற விமர்சனங்கள் இல்லாத ஆரோக்கியமான சுயேச்சைகுழுவாக அமையும் என்பது தற்போது மக்களின் பொதுவான கருத்தாகும்.




உலமாக்கள் வேட்பாளர்களாக கொண்ட சுயேட்சை குழு தெரிவானது நிச்சயமாக எமது ஒற்றுமைபட்ட எமது போராட்டத்தின் முழு வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை என்பதே எனது கருத்து . ஒற்றுமையே எமது பலம்







சாய்ந்தமருது உள்ளுராட்ச்சி மன்ற நவம்பர் எழுச்சியும், கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான சுயேட்சை குழு தெரிவும். சாய்ந்தமருது உள்ளுராட்ச்சி மன்ற நவம்பர் எழுச்சியும், கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான சுயேட்சை குழு தெரிவும். Reviewed by Admin on December 10, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3