Responsive Advertisement 2

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை ஏன் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது தெரியுமா?



இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அங்கீகரித்துள்ள, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்கள் நாட்டு தூதரகத்தை ஜெருசலேத்தில் அமைக்க ஆயத்தமாகியுள்ளார். இதுவரை அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரில்தான் இயங்கி வருகிறது.


டிரம்பின் நடவடிக்கை உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இவ்வாறு டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்பதை தெரிந்து கொள்ள, புனித நகரமான, ஜெருசலேத்தின் பின்னணி என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.





சிரியா, எகிப்து மற்றும் ஜோர்டான் நடுவேயான போரின் முடிவில், 1967ல் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததது.


இஸ்ரேல் ஆக்கிரமிப்பு


ஜெலுசலேத்தின் மேற்கு பகுதியை 1948ம் ஆண்டு, அரபு-இஸ்ரேல் யுத்தத்தின் முடிவில் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் ஜெருசலேத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடியபோதிலும், அதை சர்வதேச சமூகமோ, அமெரிக்காவுமோ கூட இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச சமூகம் அதை பார்க்கிறதே தவிர, இஸ்ரேலின் உரிமை என்று அதை சர்வதேச சமூகம் ஏற்கவில்லை.


ஜெருசலேமிற்கு சிறப்பு அந்தஸ்து


பாலஸ்தீனம்-இஸ்ரேல் நடுவேயான மோதலை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இருக்க முக்கிய காரணம், ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் முடிவு எட்டப்படாமல் இருப்பதுதான்.




1947ம் ஆண்டு, ஐநா சபையின், எல்லை பிரிப்பு திட்டப்படி, ஜெருசலேமிற்கு சிறப்பு ஸ்டேடஸ் கொடுக்கப்பட்டது. அதாவது, சர்வதேச கட்டுப்பாட்டின்கீழ் அந்த நகரம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.




ஜெருசலேத்தின் மதம் சார்ந்த முக்கியத்துவங்களுக்காக இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. 3 ஆபிரகாமிய மதங்களுக்கு (Abrahamic religions) ஜெருசலேம் முக்கிய நகரமாகும்.


சர்வதேச சட்டங்ளுக்கு எதிரானது


1948ம் ஆண்டு போரில், ஜியோனிஸ்ட் (யூத இயக்கத்தினர்) படைகள் ஜெருசலேத்தின் மேற்கு பகுதிகளை கைப்பற்றி, இஸ்ரேலுடன் அது இணைந்த பகுதி என அறிவித்தனர். 1967ம் ஆண்டு போரில், ஜெருசலேத்தின் கிழக்கு பகுதியை இஸ்ரேல் பிடித்தது. அப்பகுதி முன்னதாக ஜோர்டான் வசம் இருந்தது. இஸ்ரேல் சட்ட திட்டங்களை அங்கே அமல்படுத்தி, தங்கள் நாட்டின் எல்லைக்குள் அதை கொண்டுவந்தது. இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.





இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை ஏன் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது தெரியுமா? இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை ஏன் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது தெரியுமா? Reviewed by Admin on December 11, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3