கடந்த 24.11 2017 அன்று மரதங்கடவல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றின் போது ,அஹதிய்யா சன்மார்க்க பாடசாலையின் அவசியமும்,தேவையும் பற்றி பேசப்பட்டததைத் தொடர்ந்து கடந்த 03.12.2017 ஜாயிறு மரதங்கடவல அல் அமீன் அஹதிய்யா பாடசாலை என்ற பெயரில் புதிதாக அஹதிய்யா சன்மார்க்க பாடசாலை ஒன்று புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
87 மாணவர்களுடனும், 08 ஆசிரியர்களுடனும் உதயமாகிய அஹதிய்யா சமய பாடசாலை அநுராதபுர மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனச் செயலாளர் எம்.ஆர்.எம்.ரனீஸ் தலைமையில் கெக்கிராவ வலய அஹதிய்யா பாடசாலைகளின் இணைப்பாளரும்,அந் நஹ்லா அஹதிய்யாப் பாடசாலையின் தலைவருமான அஷ் ஷெய்க் ஜாயிஸ்(உஸ்வி)அவர்களின் பங்கு பற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் .முன்னால் கெக்கிராவ பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான கே.எம்.எம்.ரபீக் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்ததோடு,பெற்றோர்,பழைய மாணவர் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரம் நிருபர் - ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.
மரதங்கடவளையில் புதிய அஹதிய்யா உதயம்.
Reviewed by Admin
on
December 06, 2017
Rating:
Reviewed by Admin
on
December 06, 2017
Rating:

No comments: