பிறர் சொத்தில் வாழ்கின்ற எவரும் பள்ளிவாசல் நிவாகத்திற்கோ அதன் தலைமை பொறுப்புக்கோ பொருத்தமற்றவர்கள் அது நானாக இருந்தாலும் இதுதான் எனது கருத்து.
அதாவது பெண்ணிடம் சீதனம் பெற்று அந்த சீதனச் சொத்தில் வாழ்கின்ற எவரும் பள்ளிவாசல் தலமைக்கோ அதன் நிர்வாகத்திற்கோ தகுதியற்றவர்களாவர் நம்மில் அதிகமானோர் அன்று தொட்டு இன்றுவரை பெண்ணிடம் வீடுவாசல் சொத்துக்கள் பெற்று அப்பெண்ணின் வீட்டிலேயே வழ்ந்து வருகின்றேம் பெண்ணின் சொத்துக்கு ஆசைப்பட்டு வாழ்கின்ற நாம் பள்ளிச் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்போமா...?
இப்படியானவர்களை பள்ளிவாசல் பொறுப்புக்களுக்கு உள்வாங்கும் போது தான் உழைத்து வீடு கட்டி மஹர் கொடுத்து பெண்ணெடுத்து வாழ்கின்ற ஒருவர் நிர்வாகத்திடம் கேள்வி கேட்கும்பட்சத்தில் தைரியமாக எப்படி பதில் கூறமுடியும்....?
ஆகவே இப்பதவிக்கு பொருத்தமானவர்கள் மார்க்கத்தை நங்கறிந்து மஹர் கொடுத்து பெண்ணெடுத்து தன் உழைப்பில் வீடு கட்டி ஈமானுக்கு பயந்து நேர்மையாய் வாழ்கின்றவர்களே பொருத்தமானவர்களெம்பது எனது கருத்தாகும்.
"இனி உங்கள் கருத்துக்களை புனையலாம்........
முஹம்மட் ஜெலீல்,
தலைமைக்கு தவிக்கும் பொது மகனே இதைக் கொஞ்சம் படிமகனே
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:

No comments: