ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அநுராதபுரம் கிழக்கு தொகுதி அமைப்பாளரின் கவனயீனம் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அநுராதபுர மாவட்டத்தின் முதலாவது தலைவர் என்ற வகையில் தனக்கு உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்காமைக்கு எதிராக எனது மக்கள் சக்தியை காட்டுவதற்காக சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நொச்சியாகம பிரதேச சபையின் முன்னால் தலைவர் நளின் திஸாநாயக்க தெரிவித்தார்.
தொகுதி அமைப்பாளர்கள் எவ்வளவுதான் தம்மை புறக்கணித்தாலும் ஜனாதிபதியும்,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்கவுடன் சேர்ந்து தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபடப் போவதாகவும்,எக்காரணம் கொண்டும் ஐ.தே. கட்சியுடன் இணையப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்.
நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உண்டு பண்ணுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்கவுடன் அரசியல் செய்த ஒரே தலைவர் நான்.இருந்தும் அநுராதபுரம் கிழக்கு தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் எனக்கு பெயர் பட்டியலில் இடம் தரவில்லை.ஆனால் முன்னால் உறுப்பினர்கள் பலருக்கு நியமனப் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு முன் வந்துள்ளார்.இதில் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு வகையிலும் பொருத்தமில்லாதவர்களையே இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட பெயரிட்டுள்ளார்கள்.
நான் பரம்பரை பரம்பரையாக ஸ்ரீ.ல. சுதந்திர கட்சி அங்கத்தவன். அதேபோல் நல்லாட்சி அரசாங்கம் ஒன்று உருவாவதற்கு காரணமாயிருந்த நான் இம்முறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாயினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்தே ஓய்வு பெறுவேன் என்றார்.
அநுராதபுரம் நிருபர் ஏ.ஆர்.எம்.ரபியூதீன்.
சுயேட்சையாக போட்டியிடப் போவதாக நொச்சியாகம பிரதேச சபையின் முன்னால் தலைவர் தெரிவிப்பு
Reviewed by Admin
on
December 13, 2017
Rating:
Reviewed by Admin
on
December 13, 2017
Rating:

No comments: