வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து அங்கிருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவ் வீட்டின் பின் வேலி வழியாக உள்நுழைந்த நபர்கள் வீட்டுக் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த சங்கிலி, தோடு, மோதிரம் உள்ளிட்ட ஐந்து பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இரவு வேளை வீட்டில் வசிப்பவர்கள் வீட்டிற்குச் சென்ற போதே திருட்டுப் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
-வவுனியா நிருபர்-
வீடு உடைத்து நகை திருட்டு
Reviewed by Admin
on
December 05, 2017
Rating:
Reviewed by Admin
on
December 05, 2017
Rating:

No comments: