Responsive Advertisement 2

வவுனியாவில் முதல்முறையாக மாகாண மாற்றுத்திறனாளிகள் தினம்.



சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் மாகாண மட்டத்தில் இதுவரை காலமும் கைதடி நவீல்ட் பாடசாலையிலேயே நடைபெற்று வந்தது. இவ்வருடம் 2017 முதல் தடவையாக வெளிமாவட்டம் ஒன்றில் இதனை நடாத்துவதற்கு மாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தீர்மானம் மேற்கொண்டு (12.12) செவ்வாய் காலை 9 மணிக்கு  வவுனியா கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. 





இந்த வகையில்  சமூகசேவைகள் திணைக்கள  மாகாண பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக 5 மாவட்டங்களைச்சேர்ந்த 5 இளம் வயதினர் முல்லைத்தீவில் இருந்து செல்வி ப.தனுஷா, கிளிநொச்சியில் இருந்து செல்வன் ச. ரஜீபன் , வவுனியாவில் இருந்து ந.பாத்திமா ஹிக்மா, மன்னாரில் இருந்து த.அபிஹாஜினி யாழ்ப்பாணத்தில் இருந்து வி.அபிவர்மன் அழைக்கப்பட்டுள்ளனர் .





இந்நிகழ்வில் ஏனைய விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரன, பிரதேச செயலாளர்கள் கே.பரந்தாமன், கா.உதயராசா, கே.சிவகரன், எஸ்.ஜானக மற்றும்  , திணைக்களங்கள் , அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மாணவர்கள் ,மூத்தோர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் , மாற்றுத்திறனாளிகள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் .





விசேட நிகழ்வுகளாக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி  நெல்லி ஸ்ராரின் அனுசரணையில்  நடைபெற்ற வினாடி வினாப்போட்டியின் இறுதி சுற்று மேடையில் நேரடியாக இடம்பெறவுள்ளது. இதில் வவுனியா மாவட்டச் செயலக அணியை எதிர்த்து வவுனியா வடக்கு பிரதேச செயலக அணி பலப்பரீட்சையில் சந்திக்கவுள்ளனர்.






மேலும் மாகாண மட்ட விழாவில் தமது பிரதேச செயலகங்களில் அளப்பரிய சமூகசேவையாற்றி வரும் சமூகசேவையாளர்களும் அழைத்து கௌரவிக்கப்படவுள்ளனர் . மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்வுகள் இசை நிகழ்ச்சி என்பனவும் இடம்பெறவுள்ளன.




சுடர்








வவுனியாவில் முதல்முறையாக மாகாண மாற்றுத்திறனாளிகள் தினம். வவுனியாவில் முதல்முறையாக மாகாண மாற்றுத்திறனாளிகள் தினம். Reviewed by Admin on December 11, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3