வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று காலை 9.30மணியளவில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்றினைந்த பட்டதாரிகள் நல்லாட்சி அரசே நாடகமாடாதே கொடுகொடு வேலையைக்கொடு, தமக்கு வழங்கப்பட்ட வாக்கறுதிகள் நிறைவேற்றப்படவில்லை இதுவரைகாலமும் நாம் ஏமாற்றப்ட்டது போதும் இனியும் ஏமாறத் தயாரில்லை வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படவில்லை என்ற கேசமிட்டு மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டதுடன் வியாபார நிலையங்களுக்குச் சென்று எமது போராட்டம் தொடர்ந்து இவ்வாற செல்வதை நாம் விரும்பவில்லை எமது போராட்டத்தை வடமாகாண மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டமாக விரைவில் நடாத்தத்தீர்மானித்துள்ளோம். எனவே எமது போராட்டத்தில் தாங்களும் பங்குபற்றி எமது தொழில் உரிமைக்கு ஆதரவு வழங்குமாறு தெரிவித்து தமது துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் விருட்சம் அமைப்பு தனது ஆதரவினை வழங்கிருந்தது
-சுடர்-
வேலையற்ற பட்டதாரிகள் கவனவீர்ப்புப் போராட்டம்
Reviewed by Admin
on
December 03, 2017
Rating:
No comments: