வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இன்று (07) பாடசாலையின் பிரதி அதிபர் த.மோகன் தலமையில் நடைபெற்றது.
இதன்போது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற எட்டு மாணவர்கள் உட்பட 55 மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணண், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ப.தியாகராஜா ஆகியோர் கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்தகொண்டிருந்தனர்.
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழா
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:
No comments: