வெளிநாட்டு பணியாளர்களிடம் வரி அறிவிடப்படவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சர்ச்சைக்குரிய முறையில் 1 வீத வரி விதிக்கப்படுவதாக வெளியாகிய தகவல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய 2018ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட யோசனையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான போலியான தகவல்களை வழங்கி மக்களை திசை திருப்ப வேண்டாம் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை ; அமைச்சர் தலதா அத்துகோரள…!
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:
Reviewed by Admin
on
December 09, 2017
Rating:

No comments: