நாடாளுமன்றில் இன்று மீளவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.
“நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த சில தினங்களுக்குள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் ஜனாதிபதி கூறினார்” என லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன கூறினார்.
நாடாளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதுதொடர்பில் சபாநாயகருக்கு பதில் கடிதத்தை அனுப்பிவைப்பார் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்த மைத்திரி?
Reviewed by Admin
on
November 16, 2018
Rating:
Reviewed by Admin
on
November 16, 2018
Rating:

fddsf
ReplyDelete