Responsive Advertisement 2

கல்லூரி மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள்





வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் அமர்வு வழக்கறிஞர் மெரினாவில் உள்ள கல்லூரி கட்டிடம் குறித்து தெரிவித்த கருத்துக்கு அங்கு படிக்கும் மாணவர்களின் குணநலம் சேதம் அடைந்தால் எப்படி மாற்ற முடியும் என வேதனை தெரிவித்தனர்.


சென்னை கடற்கரை சாலையில் கட்டப்படும் எம்.ஜி.ஆர் விழா வளைவைத் திறக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும்வரை தடை விதித்தது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு ரூ.2.5 கோடி செலவில் கட்டுப்பட்டு வருகிறது. வளைவை திறக்க தடை விதிக்க கோரி தினேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு விசாரணையின்போது காமராஜர் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக வளைவு அமைக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.


அந்த வழக்கில் பதிலாக நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது வழக்கறிஞர் அய்யாதுரை என்பவர் குறுக்கிட்டு, எம்.ஜி.ஆர். வளைவு கட்டுவதால் பிரசிடென்சி கல்லூரி பாரம்ரிய கட்டிடம் பாதுக்கப்படாமல் காக்க வேணும் என கோரிக்கை வைத்தார்.


எம்.ஜி.ஆர். வளைவு குறித்த வழக்கு நடந்துக் கொண்டிருந்தபோது வழக்கறிஞர் அய்யாதுரை என்பவர் குறுக்கிட்டு, எம்.ஜி.ஆர். வளைவு கட்டுவதால் பிரசிடென்சி கல்லூரி பாரம்பரிய கட்டிடம் பாதிக்கப்படாமல் காக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.


அப்போது நீதிபதிகள், “மாநில கல்லூரி கட்டிடத்தில் மட்டுமே பாரம்பரியம் உள்ளது, அங்கிருக்கும் மாணவர்களிடம்   நல்ல பண்புகள் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. பேருந்து தினம் என கொண்டாடும்போது என்ன நடக்கிறது என தெரியுமா?


சேதம் ஏற்பட்டால் பாரம்பரிய கட்டிடத்தை கூட மாற்றி அமைக்கலாம், ஆனால் மாணவர்களின் குணநலன்களுக்கு சேதம் ஏற்பட்டால் திருத்த முடியாது.” என தெரிவித்தனர்.


மேலும், “நீதிபதிகள் என்றால் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குகளை மட்டும் விசாரித்து செல்வதாக நினைக்க வேண்டாம், சமூகத்தின் அடித்தட்டு வரை தெரிந்து வைத்துதான் இருக்கிறோம்.” என்றும் தெரிவித்தனர்.


கல்லூரி மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள் கல்லூரி மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள் Reviewed by Admin on November 19, 2018 Rating: 5

No comments:

Responsive Advertisement 3