Responsive Advertisement 2

டயனாவிற்கு வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு



இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.


இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​டயனா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, வழக்குக்கு தொடர்பில்லாத வெளி தரப்பினர் வந்து தமது கட்சிக்காரருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கில் சம்மந்தப்படாத வெளி தரப்பினரால் அவ்வாறான உத்தரவைப் பெற முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

டயனாவிற்கு வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு டயனாவிற்கு வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு Reviewed by Admin on November 17, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3