Responsive Advertisement 2

இளம் இயக்குனர் ஸ்ஷெட்.எம்.நுஸாத் அவர்களுக்கு தேசிய ரீதியில் முதலாம் இடம்

 


வேறமாரி YouTube channel மற்றும் champion study center உம் இணைந்து இலங்கை முழுவதும் உள்ள சிறந்த குறும் திரைப்பட இயக்குனர்களை இனம்கண்டு அவர்களது இலை மறை காய் களாக உள்ள திறமைகளை வெளிக்காட்டும் நோக்கில்  அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட  சிறந்த குறுந்திரைப் படங்களுக்கும் இயக்குனர்களுக்கும் விருது வழங்கும் நிகள்வானது கடந்த 19-11-2022 அன்று இடம்பெற்றது.


இன்நிகழ்வானது கொழும்பு வெங்கடேஷ் வர மகா விஷ்ணு ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போட்டியாளகள்,அதீதிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் இதன்போது அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தினை சேர்த வளர்ந்துவரும் இயக்குனர் z.m.நுஸாத் அவர்கள் இயக்கிய ஒட்டுச் சித்திரம் குறுந்திரைப்படம் தேசிய ரீதியில்  முதலாம் இடத்தினை  பெற்றுக் கொண்டதற்காக சிறந்த இயக்குனருக்கான சான்றிதழ் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌறவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தேசிய ரீதியில்  முதலாம் இடத்தினை  பெற்றுக் கொண்ட வளந்துவரும் இளம் இயக்குனர் z.m.நுஸாத் அவர்களுக்கு எமது Todayceylon ஊடகம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

இளம் இயக்குனர் ஸ்ஷெட்.எம்.நுஸாத் அவர்களுக்கு தேசிய ரீதியில் முதலாம் இடம் இளம் இயக்குனர் ஸ்ஷெட்.எம்.நுஸாத் அவர்களுக்கு தேசிய ரீதியில் முதலாம் இடம் Reviewed by Admin on November 21, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3