Responsive Advertisement 2

முட்டை மற்றும் அரிசி விற்பனையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

 



(இறக்காமம் செய்தியாளர்)


இப்போது வெள்ளை முட்டை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை 45 ரூபாவாகவும் நிர்ணய விலை விதிக்கப்பட்டும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் பச்சை அரிசி 210 ரூபாவாகவும் நாட்டரிசி அதாவது சாப்பாட்டு அரிசி 220 ரூபாவாகவும் சம்பா 230 மற்றும் கீரிசம்பா 260 ரூபாவாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் கட்டுப்பாட்டு விலையாக நிர்ணகிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 


வியாபாரிகளாகிய நீங்கள் கட்டுப்பாட்டு விலையை  விட ஒரு ரூபா கூட்டி விற்பனை செய்தாலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் 2021 ஆம் ஆண்டின்  திருத்த சட்டமூலத்துக்கு அமைவாக  (இது  தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 19 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிடப்பட்டது). அது சாதாரண வியாபார நிலயமாக இருந்தால் 100,000 ரூபாவிலிருந்து 500,000 ரூபா வரைக்கும் தண்டப்பணமாகவும் நீதிமன்றம் நாடும்பட்சத்தில் மேலதிகமாக ஆறு மாத சிறை தண்டனையும் வழங்கப்படும்.


இதுவே ஒரு பல் பொருள் அங்காடியாக இருந்தால் 500,000 ரூபாவிலிருந்து 50,00,000 ரூபா வரைக்கும் தண்டப்பணமாக விதிக்கப்படும். 


தற்போது நாட்டில் முட்டை விலை அதிகரித்து விற்பனை செய்ய முடியும் என்று வதந்திகள் பரவிவருகின்றது. எனவே நாடு பூராகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள்  திடீர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.


 அந்த வகையில் இன்று 2022/11/11 ஆம் திகதி ஹங்வெல்ல பகுதி   பல் பொருள் அங்காடி ஒன்றிற்கு அவிசாவெளை நீதி மன்றினால்  10,20,000 ரூபாவும் தெமடகொட பகுதியில் ஒரு வியாபாரிக்கு 100,000 ரூபாவும் கொழும்பு நீதி மன்றினால்  தண்டப்பணமாக விதிக்கப்பட்டது.


இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீதி மன்றங்கள் விலைகூட்டி  விற்பனை செய்பவர்களுக்கு  எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருக்கிறது.


மேலும் அம்பாறை மாவட்ட மக்களால் அதிகமான முறைப்பாடுகள் முட்டை விலை சம்பந்தமாக  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதால் புலனாய்வு அதிகாரிகள் அம்பாறை மாவட்டதில் திடீர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். 


எனவே அம்பாறை மாவட்ட வியாபாரிகள் தங்களால் 50 ரூபாவுக்கு உற்பட்ட  விலையில் விற்பனை செய்ய முடியுமானால் அதன் விலையை காட்சிப்படுத்தி விற்பனை செய்யுங்கள் முடியாவிட்டால் தயவு செய்து சந்தைக்கு உரிய விலையில் முட்டைகள் வரும் வரைக்கும் அல்லது விலை மாற்றம் சம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சட்ட ரீதியான சுற்றரிக்கை வரும் வரைக்கும் தற்காலிகமாக முட்டை விற்பனை செய்வதை நிறுத்துமாறும் தேவை இல்லாத அசௌகரியங்களில் இருந்து விடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


நுகர்வோர் அதிகார சபை

மாவட்ட காரியாலயம் - அம்பாரை

முட்டை மற்றும் அரிசி விற்பனையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் முட்டை மற்றும் அரிசி விற்பனையாளர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் Reviewed by Admin on November 12, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3