மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் இன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனத்தை செலுத்தி சென்ற சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் அவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த விபத்து தொடர்பில் முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
Reviewed by Admin
on
November 13, 2022
Rating:
Reviewed by Admin
on
November 13, 2022
Rating:

No comments: