Responsive Advertisement 2

ஆபத்தான வைரஸ் நிறைந்த ஆப் விவரங்கள்! உங்கள் ஸ்மார்ட்போனிலும் இருக்கலாம்

 


#android #phone #virus 🔴 ⚠️⚠️


⭕️ உங்களின் ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் ஆபத்தான சில வைரஸ் நிறைந்த ஆப் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


⭕️இது உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆப் என்றால் அதுGoogle Play Store ஆகும். இந்த ஆப் உள்ளே உங்களுக்கு தேவையான Games, Entertainment, Social Apps போன்ற பலவகையான ஆஃப்கள் உள்ளன.


⭕️ஆனால் இந்த Store உள்ளே இருக்கும் ஆப் அனைத்தும் உண்மையான பாதுகாப்பான ஆஃப்கள் அல்ல. இவற்றில் பல ஆபத்து நிறைந்த ஆப் உள்ளன. இந்த ஆப் நீங்கள் டவுன்லோட் செய்தால் உங்களை சில ஆபத்தான வலைத்தளங்களுக்கு அல்லது உங்களின் தனிப்பட்ட டேட்டா போன்றவற்றையும் திருடிவிடும்.


⭕️அப்படி ஆபத்தான சில ஆஃப்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆப் நீங்கள் தெரியாமல் டவுன்லோட் செய்தால் உடனடியாக அதனை டெலிட் செய்து உங்களின் டேட்டா மற்றும் ஸ்மார்ட்போனை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.


⭕️இந்த ஆப் அனைத்தும் Android/Trojan.HiddenAds.BTGTHB எனும் வைரஸ் நிறைந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த ஆஃப்கள் அனைத்தும் 1 மில்லியன் டவுன்லோட் பெற்றுள்ளன.


⭕️ஆப் விவரங்கள்


1.Bluetooth Auto Connect


2.Bluetooth App Sender


3.Driver: Bluetooth, WIFI, USB


4.Mobile Transfer: Smart Switch


⭕️இந்த ஆப் அனைத்திலும் பல முறை பல வகையான வைரஸ் ஒளிந்திருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த ஆப் உள்ளே இருக்கும் Ad மூலம் இந்த வைரஸ் நமது போன்களில் ஊடுருவும் என்று தெரிவித்துள்ளன.


⭕️இந்த ஆஃப்களில் எதாவது ஒரு ஆப் உங்கள் போனில் இருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்யவும். இந்த ஆஃப்கள் உங்கள் போனில் தேவையில்லாத வலைத்தளங்களை நீங்கள் போனை ஆப் செய்திருந்தாலும் திறப்பதாக தெரிகிறது.


⭕️நீங்கள் வேறு ஏதாவது ஆப் உள்ளே இருந்தாலும் புதிய டேப் திறந்த இவை தானாகவே திறக்கின்றன. இந்த ஆப் அனைத்தும் நமது தனிப்பட்ட விவரங்களை திருடி விற்று அதன்மூலம் வருமானம் பெறுகின்றன.


ஆபத்தான வைரஸ் நிறைந்த ஆப் விவரங்கள்! உங்கள் ஸ்மார்ட்போனிலும் இருக்கலாம் ஆபத்தான வைரஸ் நிறைந்த ஆப் விவரங்கள்! உங்கள் ஸ்மார்ட்போனிலும் இருக்கலாம் Reviewed by Admin on November 07, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3