Responsive Advertisement 2

இலங்கை நாணயத்துக்கு டொலரை மாற்றித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட குழு கைது

 


 இலங்கை நாணயத்துக்கு, டொலரை மாற்றித் தருவதாகக்கூறி, நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட குழுவொன்று, யாழ்ப்பாணம் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளது.


33 முதல் 53 வயதுக்கு இடைப்பட்ட குறித்த நான்கு சந்தேநபர்களும், திருகோணமலை, தலவாக்கலை மற்றும் அநுராதபுரம் முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.


மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை, குறைந்த விலைக்கு பெற்றுத்தருவதாகக்கூறி, அதற்கான பணத்தை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டுவருமாறு அறிவித்து, பின்னர் குறித்த நபர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரிடம், 25 இலட்சம் மற்றும் 18 இலட்சம் ரூபா பணம் அவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.


அத்துடன், காலியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம், 10 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவையும் குறித்த குழுவினர் கொள்ளையிட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள், யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர்களின் உடமையிலிருது 825 அமெரிக்க டொலரும், 28 இலட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.


இலங்கை நாணயத்துக்கு டொலரை மாற்றித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட குழு கைது இலங்கை நாணயத்துக்கு  டொலரை மாற்றித்  தருவதாக பண  மோசடியில் ஈடுபட்ட குழு   கைது Reviewed by Admin on November 11, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3