2022 பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி கட்டாரில் உள்ள லுசைல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ஆர்ஜென்டீனா – பிரான்ஸ் அணிகள் மோதும் இப்போட்டியை 80,000 பார்வையாளர்கள் கண்டுகழிக்கும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகக்கிண்ணத் தொடரின் ஆரம்பம் முதல் இதுவரை 2.89 மில்லியன் அனுமதிச் சீட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்று இரவு கால்பந்து உலகக் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியனாகும் அணிக்கு, 42 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கிடைக்கும்.
இரண்டாம் இடம் பெறும் அணிக்கான பரிசுத் தொகை 30 மில்லியன் டொலர்களாகும்.
நேற்றைய போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்த குரேஷியாவுக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
👥 ஏனையோரும் தெரிந்து கொள்ள Forward செய்யுங்கள்.
🟩 விரைவான செய்திகள் மற்றும் தகவல்களுக்கு எமது WhatsApp குழுமத்தில் இணைந்திருங்கள்.
*TODAYCEYLON*
https://chat.whatsapp.com/LcEkSWeja3wDBF8dxxu8b8
Reviewed by Admin
on
December 18, 2022
Rating:

No comments: