கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியதில் 22 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வேகமாக பயணித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சொகுசு பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியதில் 22 பேர் படுகாயம்
Reviewed by Admin
on
December 05, 2022
Rating:
Reviewed by Admin
on
December 05, 2022
Rating:


No comments: